வெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு குறைய சில இயற்கை மருத்துவ குறிப்புகள்

Home Remedies For HeatRash

வணக்கம்..! இன்றைய பதிவில் வீட்டில் இருந்தே இயற்கை மூலமாக வியர்குரு குறைய என்ன வழிகள் உள்ளது என்பதை பற்றி பார்ப்போம். கோடை காலம் வந்தாலே அனைவருக்கும் இருக்கும் பிரச்சனை வியர்க்குரு தான். இந்த வியர்க்குரு வந்தால் உடல் முழுவதும் அலர்ஜி போல் வந்து புண்களாக மாறிவிடும். வியர்குருவை நீக்க நாம் அனைவரும் விதவிதமான பவுடர் வகைகளை பயன்படுத்துவோம். இனி அதை தவிர்த்து விட்டு எளிமையாக வீட்டில் உள்ளதை வைத்து வியர்குருவை போக்க சில வழிமுறைகளை இங்கே படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இயற்கை டிப்ஸ்:

கற்றாழை ஜெல் 

கற்றாழை ஜெல் அனைத்து சரும பிரச்சனைக்கும் தீர்வு வகிக்கிறது. சரும பிரச்சனையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் வெயில் காலத்தில் ஏற்படும் வியர்குருவிற்கும் சிறந்ததாக விளங்குகிறது.

Aloe Vera gel for heat rash

கற்றாழையில் இருக்கும் ஜெல்லை வியர்க்குரு ஏற்பட்டு இருக்கும் இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்த பின்னர் நன்றாக குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் கண்டிப்பாக இந்த வியர்க்குரு போன்ற பிரச்சனை உடனடியாக நீங்கும்.

ஐஸ் கட்டி

பெரும்பாலானோருக்கு வெயில் காலம் வந்தாலே வியர்க்குரு, அரிப்பு போன்ற பிரச்சனை இயல்பாகவே வந்துவிடும். இதற்கு சிறந்த வீட்டு வைத்தியம் என்னவென்றால் ஃப்ரிட்ஜில் இருக்கும் ஐஸ் கட்டி தாங்க.

இந்த ஐஸ் கட்டிகளை வியர்க்குரு உள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால் வியர்க்குரு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

Ice cube for rash

சந்தனம் 

வியர்க்குரு நீங்க வீட்டில் இருக்கும் சந்தனம் அல்லது சந்தன பவுடரை எடுத்து கொள்ளவும். சந்தன பவுடரை பன்னிருடன் கலந்து வியர்க்குரு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு தடவ வேண்டும்.

சந்தனம்

நன்றாக தடவிய பிறகு சிறிது நேரம் கழித்து நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை பின்பற்றினால் வியர்க்குரு தொல்லை அறவே இருக்காது.

வெள்ளரிக்காய்

வியர்க்குருவை தடுக்க வெள்ளரிக்காயை நறுக்கி அரைத்து வைத்து கொள்ளவும்.

பிறகு அரைத்து வைத்த வெள்ளரிக்காய் விழுதை வியர்க்குரு உள்ள இடங்களில் 2 அல்லது 3 மணிநேரம் தடவி நன்றாக காயவைக்க வேண்டும்.

cucumber for heat rash

நன்றாக காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் குளித்தால் வியர்க்குரு நீங்கி விடும்.

Related posts