உடல் ஆரோக்கியம் பேணிக் காக்க சில தகவல்கள்

உடல் ஆரோக்கியம் பேணிக் காக்க சில தகவல்கள்

உடற்பயிற்சி மனிதனுக்கு மிகவும் முக்கியம், எனவே காலை அல்லது மாலை கட்டாயமாக 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்.

இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை கண்டிப்பாக உறங்க வேண்டும்.

அனைவரும் வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிட வேண்டும். பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால் ஏற்படும் தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஆகியவற்றில் இருந்து விடுப்படலாம்.

மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது. உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு அடுத்த வேளை உணவு உண்ண கூடாது.

பிராய்லர் கோழிக்கறி உண்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக மீன், ஆட்டுக்கறி அல்லது நாட்டுக் கோழி சாப்பிடுங்கள்.

மைதா மாவில் செய்யும் பரோட்டாவை உண்ணாதீர்கள் இது உங்கள் ஆயுளை குறைக்கும்.

தினமும் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயையும் , இரத்தக் கொதிப்பும் வராமல் தடுக்காலம்.

உள்ளாடைகளை 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள். ஒரு நாள் பயன்படுத்திய பிறகு கட்டாயம் துவைத்து பயன்படுத்துங்கள்.

4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

தினமும் 2 வேளை மலம் கழிக்க வேண்டும். அதாவது காலையிலும், இரவு உணவுக்கு முன்பும். கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

Related posts