உடல் பருமன், மூட்டு வாதம் நீக்கும் கோமுகாசனம்

Gomukhasana-benefits

கோமுகாசனம் என்ற ஆசனத்தின் மூலம் நம் உடம்பிற்கு நிறைய பலன்கள் கிடைக்கின்றன. அதனை விரிவாகப் படித்த பின் ஒவ்வொருவரும் நிச்சயமாக இந்த ஆசனத்தைப் பயில்வது உறுதி.

கோமுகாசனம் (Gomukhasana) செய்முறை:

விரிப்பில் கால்களை நீட்டி அமரவும். வலது காலை மடித்து பாதத்தை இடது தொடையின் கீழ் வைக்கவும். இடதுகாலை மடித்து வலது தொடை மீது வைத்து, வலது பாதத்தை இடது தொடையின் பக்கத்தில் தரை மீது படியும்படி வைக்கவும். இடது கையை தலைக்கு மேல் உயர்த்தி மடித்து கையை முதுகுக்கு பின்புறம் கொண்டு வந்து முதுகை தொடவும்.

வலது கையை சாதாரணமாக பின்புறம் கொண்டு வந்து இடது கை விரல்களை பிடிக்க முயற்சிக்கவும். சாதாரண மூச்சில் 20 எண்ணிக்கை இருக்கவும். பின் கைகளைப் பிரித்து கால்களை பிரித்து அமரவும். மாற்று ஆசனமாக இடது காலை மடித்து, பின் வலது காலை மடித்து முன்புசெய்தது போல் செய்யவும்.  உங்களது எந்த கால் முட்டியின் மீது உள்ளதோ அந்த கையை தலைக்கு மேல் உயர்த்தி மடித்து பயிற்சி செய்யவும்.

கோமுகாசனம் செய்வதால் மற்ற பலன்கள்:

மலச்சிக்கல் நீங்கும். மனிதனுடைய எல்லா வியாதிக்கும் மூல காரணம் மலச்சிக்கல் தான். உடலில் கழிவுகள் சரியாக வெளியேறாமல் தங்குவதால் பல வித நோய்கள் ஏற்படுகின்றது. இக்கோமுகாசனம் செய்தால் மலச்சிக்கல் நீங்கும்.

நுரையீரல், மார்பு, இதயம் பலம் பெறுகின்றது. குடலிறக்கம், விரைவீக்கம், தூக்கமின்மை, தலைவலி மூல வியாதி, கூன்முதுகு நீங்கும்.

மனிதனின் தோள்பட்டைகளில் காணும் ஏற்றம், இறக்கம் நீங்குகின்றது.
கணையம் ஒழுங்காக இயங்குகின்றது. அதனால் நீரிழிவு வராது. வந்தாலும் நீங்கும்.ரத்த ஓட்டம் சீராக உடலில் நடைபெறும்.சிறுநீரகம் சிறப்பாக இயங்கும்.
தோள்பட்டை வலி நீங்கும்.

நீங்கள் ஒரு ஆசனத்தை செய்தால், அதனுடைய மற்ற பலன்கள் எவ்வளவு உள்ளது பார்த்தீர்களா! யோகாசனங்கள் எல்லாமே நன்மை தரக் கூடியது தான்.  நம் நாட்டில் வாழ்ந்த பெரிய மகான்கள் ஒவ்வொரு ஆசனத்தையும் செய்து பார்த்து அனுபவித்து அதன் எல்லாப் பலன்களையும் உணர்ந்தார்கள். மகான்கள் சுட்டிக்காட்டிய யோகாசனங்களில் கோமுகாசனமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

Related posts