மூக்கடைப்பு, சளித்தொல்லையை போக்கும் இஞ்சி – துளசி டீ

மூக்கடைப்பு, சளித்தொல்லையை போக்கும் இஞ்சி - துளசி டீ

தும்மல், மூக்கடைப்பு, தலைபாரம், தலைவலி, சளித்தொல்லை இருப்பவர்கள் இஞ்சி – துளசி டீ அருந்தலாம். இன்று இந்த டீ செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • டீத்தூள் – 4 டீஸ்பூன்
  • எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்
  • தேன் – 6 டீஸ்பூன்
  • இஞ்சிச் சாறு – சிறிதளவு
  • துளசி – 5 இலைகள்
  • தண்ணீர் – 4 கப் (அ) 5 கப்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் அல்லது டீ குக்கரில் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் நன்கு கொதிக்கும்போது டீத்தூள், இஞ்சிச் சாறு, துளசியைச் சேர்க்கவும்.

உடனே 5 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும்.

பின் ஒரு பெரிய கப்பில் தேன் தேவைக்கேற்ப சேர்த்து டீயை வடிகட்டி கலக்கி எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

பால் இல்லாத இந்த டீ சுவையாக இருக்கும்.சூடாகவோ, ஜில்லென்றோ பருகலாம்.

Related posts