முகத்துக்கு அடிக்கடி பயன்படுத்தகூடாத பொருள்கள்

முகத்துக்கு அடிக்கடி பயன்படுத்தகூடாத பொருள்கள்

வீட்டில் இருக்கும் பொருள்களை எப்படி எத்தனை முறை பயன்படுத்துகிறோம் என்பதை உணர்ந்து பயன்படுத்த வேண்டும். முகத்துக்கு அடிக்கடி பயன்படுத்தகூடாத பொருள்கள் என்னவென்று பார்க்கலாம்.

பொதுவாகவே பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தங்களை அழகாக காட்டிகொள்வதில் சற்று அதிகமாகவே மெனக்கெடுகிறார்கள். ஒரு பக்கம் பியூட்டி பார்லர் சென்று அழகு படுத்திகொள்கிறார்கள். பிறகு வீட்டிலிருக்கும் போதும் அழகு பராமரிப்பு செய்கிறார்கள்.

குறிப்பாக வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டு அழகுப்படுத்தி கொள்வது சாத்தியம் என்பதை ஒப்பு கொள்ள வேண்டும். ஆனால் அப்படி பயன்படுத்தும் பொருள்களுடன் கூடுதலாக கலக்கும் பொருள்கள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும். சமயங்களில் அவை சருமத்தில் ஒவ்வாமையை உண்டாக்கிவிடவும் வாய்ப்புண்டு.

முகப்பருவுக்கு என்ன செய்யலாம் கரும்புள்ளி வந்தால் என்ன போட வேண்டும், கருவளையம் மறைய செய்ய வேண்டியது என்ன முகம் வெள்ளையாகுமா இப்படியான அழகு தரும் கேள்விகளை முன் வைக்கும் பெண்கள் அதிகரித்துவருகிறார்கள். ஆனால் அப்படி பயன்படுத்தும் பொருள்கள் சருமத்துக்கு நல்லதா? அவை நிச்சயம் பலன் தருமா? இதனால் சரும பிரச்சனைகள் உண்டாகுமா? இது குறித்து யாரும் கேட்பதில்லை.

சருமத்தில் அதிகப்படியான பிரச்சனைகள் வந்த பிறகு தான் சரும பராமரிப்பு நிபுணர்களை நோக்கி ஓடுகிறார்கள். வீட்டில் இருக்கும் பொருள்களை எப்படி எத்தனை முறை பயன்படுத்துகிறோம் என்பதை உணர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பதுதான்.

வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை சாறு ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் நல்லது. ஆனால் அதை அப்படியே பயன்படுத்தாமல் சம அளவு தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும். முகத்தின் மினுமினுப்புக்கு ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்துவதும் உண்டு. அதே போன்று முகத்தில் இறந்த செல்களை அகற்ற ஸ்க்ரப் செய்ய பயன்படுத்தும் சர்க்கரை, பேக்கிங் சோடா இவையெல்லாம் எப்போதாவது பயன்படுத்த வேண்டியவை. அப்படியே பயன்படுத்தினாலும் கண்களுக்கு அருகில் வாய்ப்பகுதியில், மூக்கு துவாரங்களில் இதை அதிகம் பயன்படுத்தவோ கொண்டு செல்லவோ கூடாது. அந்த இடங்கள் எல்லாமே மிருதுவானவை. அப்படியானால் இதையெல்லாம் பயன்படுத்தகூடாதா என்று கேட்கலாம்.

அழகு பொருள்களுடன் கலந்து உரிய முறையில் பயன்படுத்தலாம். அதே நேரம் அடிக்கடி பயன்படுத்தாமல் வாரம் ஒருமுறை மாதம் இருமுறை பயன்படுத்துவது ஆபத்தில்லை. சர்க்கரை மாற்றாக கோதுமை தவிடு பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறை சம அளவு நீர் கலந்து ஃபேஸ் பேக் -போடும் போது கலக்கலாம். பேக்கிங் சோடா இயன்றவரை தவிர்ப்பது நல்லது என்பது சரும பராமரிப்பு நிபுணர்களின் அறிவுரை. ஆப்பிள் சீட வினிகரை பயன்படுத்தும் போது மேலாக அதன் நீரை பயன்படுத்தினாலும் கூட போதுமானது. எப்படியாக இருந்தாலும் தினமும் இதை பயன்படுத்தினால் சருமம் எரிச்சலுக்கு உள்ளாகும்.

சிலர் அடிக்கடி பேஸ் மாஸ்க் பயன்படுத்துவது உண்டு. இதை அடிக்கடி முகத்துக்கு பயன்படுத்தும் போது சருமத்தின் முதல் அடுக்கில் இருக்கும் தோல்களும் உரிந்து சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும். வெயில் காலங்களில் சற்று கூடுதலாக எரிச்சலை உண்டாக்கும்.

இவை எல்லாவற்றையும் விட அழகை பாதிக்காமல் தரும் எண்ணற்ற பொருள்கள் உண்டு. காய்கறிகள், பழங்கள், சந்தனம், பாசிப்பயறு, மஞ்சள் போன்றவை சருமத்துக்கு பாதிப்பை உண்டாக்காது. எலுமிச்சை சிட்ரஸ் குணங்கள் நிறைந்ததால் அதிகப்படியாக பயன்படுத்தும் போது அவை எரிச்சலை உண்டாக்ககூடும் அவ்வளவே.

Related posts