Doctor Vikatan: டிரெட்மில் டெஸ்ட் ரிசல்ட் நார்மல்… அதன் பிறகு ஹார்ட் அட்டாக் எப்படி வந்தது..? | Treadmill test result was normal; how the heart attack after that?

சில நேரங்களில் மூச்சுவிடுதலில் மாற்றம் ஏற்பட்டதையே உணராமல் இருப்பார்கள் சிலர். அது வயதுக்கேற்ப இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளவும் டிரெட்மில் டெஸ்ட் செய்ய வேண்டி வரலாம். டிரெட்மில் டெஸ்ட் உடன், இசிஜி பரிசோதனையும் சேர்த்துச் செய்யும்போது இன்னும் துல்லியமாக பிரச்னைகளைத் தெரிந்துகொள்ள முடியும்.

டிரெட்மில் டெஸ்ட்டில் நார்மல் என வந்துவிட்டதால், அந்த நபருக்கு இதயம் தொடர்பான பிரச்னைகளே இல்லை என எடுத்துக்கொள்ள முடியாது. டிரெட்மில் டெஸ்ட் என்பது சில நேரங்களில் மட்டும்தான் அசாதாரணமாக காட்டும். இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் ஓரளவுக்கு மேல் அடைப்பு இருக்கும் பட்சத்தில் டிரெட்மில் டெஸ்ட் ரிசல்ட் அசாதாரணம் என்று ரிசல்ட்டில் தெரியவரலாம். அதே நேரம் நார்மல் என்ற ரிசல்ட்டை வைத்து ஒருவரின் இதயம் 100 சதவிகிதம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று சொல்லவே முடியாது.

இதயநோயாளிகள் அதற்கான ஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சையையோ, அறுவை சிகிச்சையையோ மேற்கொண்ட பிறகு டிரெட்மில் டெஸ்ட் செய்யவே கூடாது என்றொரு கருத்து பலரிடம் இருக்கிறது. அதுவும் தவறு. மாரடைப்புக்குப் பிறகும் சில காரணங்களுக்காக டிரெட்மில் டெஸ்ட் செய்யச் சொல்லி மருத்துவர் அறிவுறுத்துவார்.

எனவே இதய ஆரோக்கியத்தில் இப்படி அடுத்தவர் சொல்கிற தகவல்களைக் கேட்டு அலட்சியமாக இருக்காதீர்கள். சந்தேகங்கள் இருந்தால் மருத்துவரிடம் தெளிவு பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Source link

Related posts

Leave a Comment