Doctor Vikatan: அல்சரை குணப்படுத்துமா அம்மான் பச்சரிசி? |Does Amman Pacharisi cure ulcer problem?

Doctor Vikatan:அல்சருக்கு அம்மான் பச்சரிசி பொடியைப் பயன்படுத்தலாமா… அப்படியானால் எத்தனை நாள்களுக்கு எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?

– Sathyamoorthi Palanisamy, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவர் யோ. தீபா

இயற்கை மருத்துவர் யோ. தீபா

இயற்கை மருத்துவர் யோ. தீபா

அம்மான் பச்சரிசி செடிக்கு `ஆஸ்துமா செடி” என இன்னொரு பெயரும் உண்டு. அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட இந்தத் தாவரம், மூச்சிரைப்புக்கு மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.

முகப்பரு, மரு, காயங்கள் என சருமப் பிரச்னைகளுக்கு அம்மான் பச்சரிசியை அதிக அளவில் பயன்படுத்தும் வழக்கம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அம்மான் பச்சரிசி என்ற பெயரை வைத்து இது ஒருவகையான அரிசிபோல என பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், இது அரிசி அல்ல, ஒருவகை மூலிகைச் செடி. இந்தச் செடியின் விதைகள், நெல்போல காட்சியளிப்பதால் இப்படியொரு பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.


Source link

Related posts

Leave a Comment