தேங்காய் பால் கறிவேப்பிலை ஜூஸ்

தேங்காய்ப்பால் கறிவேப்பிலை ஜூஸ்

தேங்காய் பால் கறிவேப்பிலை ஜூஸைக் காலை உணவாக உட்கொள்ளும்போது நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்க முடியும். இந்தத் தொகுப்பில் இதன் செய்முறையைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தேங்காய் – ஒரு மூடி
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
நாட்டு சர்க்கரை – சிறிதளவு
ஊறவைத்த பாதாம் பருப்பு – 10

செய்முறை:

தேங்காயை துருவிக்கொள்ளவும். ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, ஊறவைத்த பாதாம்பருப்பு, நாட்டுச்சர்க்கரை மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.

பின்னர் அரைத்த ஜூஸை பெரிய வடிகட்டியில் ஊற்றி வடிகட்டிக்கொள்ளவும்.பிறகு தேங்காய் – கறிவேப்பிலை – பாதாம் விழுதை மீண்டும் சிறிதளவு தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

இந்தச் சாற்றை ஏற்கெனவே எடுத்து வைத்த சாற்றுடன் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.தேங்காய்ப்பால் கறிவேப்பிலை ஜூஸ் ரெடி.

குறிப்பு: இதில் கறிவேப்பிலைக்குப் பதிலாக கொத்தமல்லி இலைகள் அல்லது புதினா இலைகள் சேர்த்து அரைக்கலாம்.

Related posts