இரத்த வகைகளும்.. இரத்த தானமும்..

இரத்த வகைகளும்.. இரத்த தானமும்..

இரத்தம் என்பது பொதுவாக 4 வகைப்படும். அதாவது ஏ, பி, ஓ, ஏபி ஆகும்..

ரத்தத்தில் மூன்று விதமான செல்கள் இணைந்திருக்கும். அதாவது வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், ரத்தத்தை உறைய வைக்கும் தட்டணுக்கள் ஆகியவையாகும்.

ஒவ்வொருவரும் தங்களது ரத்த வகையை தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

இரத்தம் மனிதனின் வாழ்கையில் மிகவும் உயரிய பரிசாகும். இரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் நமது தேசத்தின் மொத்ததேவை சுமார் 4 கோடி யூனிட்கள் ஆகும். ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே.

ஒரு யூனிட் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் ஆகும்..

இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.(blood donation)

இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். (blood groups)

ஒரு யூனிட் ரத்தத்தை மூன்று பகுதியாக பிரித்து, ரத்த சிவப்பணுக்கள், பிளாஸ்மா, பிளேட்ளட்கள் என பயன்படுத்த முடியும்.

தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.

ஒரு யூனிட் ரத்த தானம் செய்யப்படும்போது 650 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

இரத்த தானம், நீங்கள் செய்ய முன் வரும் போது, அதற்கான நேரவிரயம் 15-20 நிமிடங்கள் மட்டுமே.

தானம் செய்த, இரத்த சிவப்பணுக்களை, 42 நாட்கள் வரை உபயோகிக்கலாம். தட்டணுக்களை எடுத்த 5 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

சராசரியாக நமது உடலில் 5 லிட்டர் ரத்தம் இருக்கும். தானத்தின் போது, 350 மி.லி., ரத்தம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது.

1900 ஆம் ஆண்டில் டாக்டர். லான்ஸ்டைனர் என்பவர் ரத்தத்திலுள்ள பிரிவுகளைக் கண்டு பிடித்தார்.

இதுவரை மனித ரத்தத்துக்கு மாற்றாக எதுவும் கண்டறியப்படவில்லை.

பக்கவிளைவுகள்:

யார் யார் ரத்த தானம் கொடுக்க முடியாது?

ஆஸ்துமாவிற்காக ‘கார்டிஸோன்’ மருந்து சாப்பிடுவோர்
இதய நோய், வலிப்பு, ரத்தம் உறையாமை ஆகிய நோய்கள் உள்ளோர்
காசநோய் உள்ளோர்
இன்சுலின் செலுத்தி கொள்வோர்

ரத்த தானத்திற்கு பின் என்ன செய்ய வேண்டும்?

திரவ உணவு அருந்த வேண்டும்
ஒரு மணிநேரத்திற்கு புகை பிடிக்க கூடாது
6 மணி நேரத்திற்கு மது அருந்த கூடாது

யாருக்கு எந்தவகை இரத்தம் கொடுக்கலாம்?

Related posts