மாதவிடாய்: தரையில் அமர்ந்திருக்கும் மகள்; பெருமைப்படும் அம்மா… வைரல் வீடியோவிற்கு கண்டனங்கள்!

மாதவிடாய் குறித்த மூடநம்பிக்கைகள் இன்னும் பல இடங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றன. `தீட்டு’ என்ற பெயரில் யாரையும் தொடக்கூடாது, தனி தட்டு, பாத்திரங்கள் என மாதவிடாய் சமயத்தில் மட்டும் ஒதுக்கி வைப்பது பரவலாகவே இருக்கிறது.

மாதவிடாய்

இதற்கு உதாரணமாக இணையத்தில் ஒரு சம்பவம் வைரலாகி வருகிறது. சூரத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் ரூபல் மிதுல் ஷா. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது குடும்பத்தோடு டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடும் காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அனைவரும் டேபிளில் அமர்ந்து இருக்க, அவரின் மகள் மட்டும் சோகமான முகத்தோடு தரையில் உட்கார்ந்து இருக்கிறார். தரையில் அமர்ந்து சாப்பிடுமாறுசாப்பிடுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

`ஷிஃப்ட் செய்யப்பட்டதற்கு பின்னர் குடும்பமாக அமர்ந்து சாப்பிடும் முதல் மதிய உணவு’ எனக் குறிப்பிட்டு, அதோடு `மாதவிடாய் தினங்களில் அந்த நபர் பிறரோடு தொடர்பு கொள்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்கிறோம். நானும் ஜான்வியும் அதைப் பின்பற்ற விரும்புகிறோம்.

மாதவிடாய்

என் குடும்பத்தினர் காலங்காலமாக எடுத்த அந்த விருப்பத்தை நாங்கள் மதிக்கிறோம், இன்று வரை நாங்கள் அதை மிகவும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கிறோம்’..! என்று குறிப்பிட்டுள்ளார்.

பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த இந்தப் பதிவு, நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது. 

கலாசாரம், பண்பாடு எனக் கூறி ஏமாற்றப்பட்டு வருவதை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள் என பலரும் எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றனர். 

இந்தச் சம்பவம் குறித்து உங்களின் கருத்தென்ன?!… கமென்டில் சொல்லுங்கள்! 


Source link

Related posts

Leave a Comment