Herbs For Better Sleep : புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கமே வரலையா?

Herbs for insomnia

தூக்கமின்மை (insomnia) பிரச்சினையும் அதனால் ஏற்படும் விளைவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இரவில் படுத்ததும் தூக்கம் வந்ததெல்லாம் அந்த காலம். இந்த தூக்கமின்மை பிரச்சினைக்கு (sleeping disorder) நிறைய காரணங்கள் இருந்தாலும் இதை சரிசெய்யும் வழிகள் என்றால் அது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தான். இதற்கு மிகச்சிறந்த தீர்வாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வரும் வழிதான் மூலிகைகள். நம்முடைய வீட்டிலேயே கிடைக்கும் எளிமையான மசாலா பொருள்களை வைத்து தூக்கமின்மை பிரச்சினையை சரிசெய்ய முடியும். அந்த மசாலாக்கள் என்னென்ன, எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

குறிப்பாக இன்றைய இளைஞர்களின் பல்வேறு வாழ்க்கை முறை மாற்றங்களால், உணவுப் பழக்கத்தால் சரியான தூக்க சுழற்சி முறை இருப்பதில்லை. இதன் காரணமாக மன அழுத்தம், மன பதட்டம் ஆகியவை உண்டாகி உடல் பருமன், இதய நோய் ஆபத்துகளைக் கொண்டு வந்து விடுகின்றன. இந்த அபாயங்களைக் குறைக்க வேண்டுமென்றால் உங்களுடைய தூக்க சுழற்சியை முறைப்படுத்த வேண்டும். அதற்கு இந்த ஐந்து வகையான மசாலா பொருள்களும் உங்களுக்கு உதவும்.

தூக்கமின்மையை போக்கும் சீரகம்

​சீரகம் இந்திய பாரம்பரிய உணவில் தவிர்க்க முடியாத ஒரு மசாலா பொருள். இது நம்முடைய உடலில் உள்ள உறுப்புகளின் சீரான இயக்கத்துக்கு துணையாக இருப்பதால் சீரகம் என்கிற பெயர் பெற்றது என்று சொல்வார்கள். உணவுக்கு தனித்துவமான நறுமணத்தையும் சுவையையும் கொடுக்கக்கூடிய இந்த சீரகம் உடலின் ஆரோக்கியத்துக்கும் மிக நல்லது.

cumin seeds
Cumin Seeds

இதிலுள்ள ஜீரால்டிஹைடு என்னும் மூலப்பொருள் நம்முடைய ஜீரண ஆற்றலை மேம்படுத்தி வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. இதனால் அடிப்படையில் நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்வதோடு நல்ல தூக்கத்தையும் மேம்படுத்தும். குறிப்பாக தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கிற மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றைக் குறைக்க உதவி செய்யும்.

ஹார்மோன் சுரப்பை தூண்டி மூளையின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த உதவுகின்றன நல்ல . மேலும் இரவு நேர தூக்கத்தைத் தூண்டுகின்றன. அதனால் இரவில் தூங்கச் செல்லும் ஒரு கிளாஸ் சீரக தண்ணீர் குடித்துவிட்டு படுத்தால் நல்ல தூக்கத்தைப் பெற முடியும்.

தூக்கமின்மையை போக்கும் ஜாதிக்காய்

மிக பயங்கரமான வாசனை பண்பு கொண்ட ஒரு மசாலா பொருள் தான் ஜாதிக்காய். இது லேசான இனிப்பு சுவையும் காரம் மற்றும் கசப்பு சேர்ந்த ஒருவித காட்டமான சுவையும் கொண்டது. காலங்காலமாக செரிமானப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் பாலுணர்வைத் தூண்டவும் ஜாதிக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஜாதிக்காயில் உள்ள எசன்ஷியல் ஆயில் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் வேலையைச் செய்கிறது.

nutmeg health benefits
Nutmeg

இதனால் ரத்த நாளங்கள் நெகிழ்வுத்தன்மை அடைந்து மனஅழுத்தம், பதட்டம், மனச்சோர்வு ஆகியவற்றைக் குறைத்து தூக்கத்தை மேம்படுத்தச் செய்யும். இந்த ஜாதிக்காயை இயற்கையாக தூக்க மருந்து என்றும் கூட ஆயுர்வேதத்தில் குறிப்பிடுவார்கள்.

இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சளும் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூளும் சேர்த்து கலந்து குடியுங்கள். நல்ல தூக்கம் வரும்.

தூக்கமின்மையை போக்கும் புதினா

உணவுக்கு நல்ல மணம் கொடுப்பதற்காக நாம் புதினாவை பயன்படுத்துகிறோம். இது வாசனைக்கு மட்டுமின்றி நிறைய மருத்துவப் பயன்களையும் கொண்டிருக்கிறது.

​புதினா இலைகளில் உள்ள அடாப்டோஜெனிக் மற்றும் அமைதிப்பபடுத்தும் பண்புகள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டவை.

mint leaves
Mint leaves

புதினாவில் உள்ள மெந்தால் இயற்கையாகவே ஆன்டி ஸ்பாஸ்மோடிக் மருந்தாகச் செயல்பட்டு தசைகளைத் தளர்ச்சியாக்கி நல்ல தூக்கத்தை மேம்படுத்துகிறது.

இதனால் இரவு நேரத்தில் ஒரு புதினா டீ குடித்துவிட்டு தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் உண்டாகும்.

தூக்கமின்மையை போக்கும் சோம்பு

​சோம்பு நல்ல வாசனைமிக்க மசாலா பொருள்களில் ஒன்று. இது ஜீரண ஆற்றலை மேம்படுத்துவது உள்ளிட்ட ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது.

அதனால் கடுமையான கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகள், அசைவ உணவுகள் சாப்பிட்டவுடன் சோம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுகிறோம்.

நம்முடைய சுவாசத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கக் கூடியது. குறிப்பாக அஜீரணத்தால் உண்டாகும் வாயுத்தொல்லை, வயிறு வீக்கம் உள்ளிட்டவற்றைக் குறைக்க உதவி செய்கிறது.

தினமும் தூங்கச் செல்வதற்கு முன்பாக ஒரு கப் நீரில் சிறிது சோம்பு சேர்த்து கொதிக்க விட்டு, டீ போல தயார் செய்து வெதுவெதுப்பாக குடிக்க நல்ல தூக்கம் உண்டாகும்.

தூக்கமின்மையை போக்கும் துளசி

துளசி இநிதியாவை பொருத்தவரையில் நிறைய மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு புனிதச் செடி. ஆனால் உலகம் முழுவதிலும் துளசி அதன் மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. மற்ற இடங்களில் இதன் வேறு வகையான பேசில் பயன்படுத்தப்படுகிறது.

Tulsi health benefits
Tulsi

உடலில் உண்டாகும் வலி, மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றைக் குறைத்து, நரம்புகளை அமைதிப்படுத்தி நல்ல தூககத்தைக் கொடுக்கக் கூடியது துளசி.

இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு கப் துளசி டீயை குடித்து வரும்போது மனம் அடைவதோடு நல்ல தூக்கமும் உண்டாகும்.

Related posts