தூங்கும் போது குறட்டை சத்தம்…

Snoring-noise-while-sleeping.

எப்போதாவது குறட்டை விட்டால் பிரச்சினை இல்லை, குறட்டை சத்தம் அந்த அறையில், சில சமயங்களில் அந்த வீட்டில் யாரையும் தூங்கவிடாமல் செய்துவிடும்.

தூங்கும் போது குறட்டை பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் எடை அதிகரித்தல். பலருக்கு ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் நாளடைவில் குறட்டையும் வந்துவிடுகிறது.

ஒருவித ஒவ்வாமையாலும் சைனஸ் பிரச்சினையாலும், மூக்கிலிருக்கும் மெல்லிய தடுப்புச் சுவர் வளைவதாலும், தொண்டையிலும் அடிநாக்கிலும் தசைநார்கள் வலுவிழப்பதாலும், குடிப்பழக்கத்தாலும், தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதாலும், தொண்டையில் உள்ள சதை தடிப்பதாலும், குழந்தைகளுக்கு டான்சில் அல்லது அடினாய்டுகள் ஏற்படுவதாலும், உள்நாக்கு நீண்டு காற்று செல்லும் வழியைத் தடுப்பதாலும் குறட்டை ஏற்படுகிறது.

எப்போதாவது குறட்டை விட்டால் பிரச்சினை இல்லை, குறட்டை சத்தம் அந்த அறையில், சில சமயங்களில் அந்த வீட்டில் யாரையும் தூங்கவிடாமல் செய்துவிடும். குறட்டை விடுவதால் அவர்களால் தொடர்ந்து தூங்க முடியாது. அப்படி வரும் தூக்கமும் ஆழ்ந்த தூக்கமாக இருக்காது. தங்களுக்கு தூக்கக் குறைவு ஏற்படுகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்களால் உணரவும் முடியாது. அடுத்த நாள் வேலைக்குச் செல்லும்போது அல்லது வேலையில் இருக்கும்போது கண்ணை செருகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய தசைகள் விரிவடையும்.

இதுவே தொடர்ந்தால் சில வேளைகளில் மாரடைப்பு, பக்கவாதம் வர காரணமாக அமையலாம் என்கிறார்கள், டாக்டர்கள்.

குறிப்பாக 35 வயதைக் கடந்தால் கழுத்துப் பகுதியில் அதிக எடை கூடியிருக்கும். கழுத்தை சுற்றிலும் கொழுப்பைக் குறையுங்கள். இவ்வாறு செய்தால் குறட்டையை தவிர்க்கலாம். ஆண்களின் குறட்டை சத்தம் வீட்டில் இருப்போருக்கு இரவு தூக்கத்தை தொந்தரவிற்கு உள்ளாக்கலாம். அதேபோல் இப்படி இருப்பவர்கள் வெளியில் சென்று உறங்கினாலும் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற சங்கடம் உண்டாகலாம். இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க இந்த விஷயங்களை செய்து பாருங்கள். மாற்றம் கிடைக்கலாம்.

தூங்கும் நிலை : நிமிர்ந்தவாறு படுக்கும்போது குறட்டை அதிகமாக வரும். எனவே ஒரு பக்கமாக திரும்பிப் படுத்தால் குறட்டையைத் தவிர்க்கலாம். ஒரு பக்கமாக திரும்பிப் படுக்கும் பழக்கத்தை வரவழைக்க முதுகிற்குப் பின் துணி அல்லது நீளமான தலையணையை வைத்துவிடுங்கள்.

உடல் எடையைக் குறைத்தல் : நீங்கள் உடல் எடை அதிகரித்திருந்தாலும் குறட்டை வரலாம். எனவே எடையைக் குறைக்கலாம். குறிப்பாக 35 வயதைக் கடந்தால் கழுத்துப் பகுதியில் அதிக எடை கூடியிருக்கும். கழுத்தை சுற்றிலும் கொழுப்பைக் குறையுங்கள். இவ்வாறு செய்ய குறட்டையை தவிர்க்கலாம்.

மதுப் பழக்கம் கைவிடல் : மதுப்பழக்கமும் குறைட்டைக்கு முக்கிய காரணம். குறிப்பாக தூங்கும் முன் மது அருந்தினால் வழக்கத்தைக் காட்டிலும் குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும்.

கடினமான வேலை : ஓய்வே இல்லாமல் கடினமாக உழைத்துவிட்டு படுத்தாலும் உடல் களைப்பில் தூக்கம் வரும். அதேபோல் தூங்கும் முன் கடுமையான உடற்பயிற்சி செய்துவிட்டு தூங்கினாலும் வரும்.

தொண்டையை பரிசோதனை செய்யுங்கள் : குறட்டை சத்தம் வித்தியாசமாகவும், கேட்க முடியாத அளவிற்கு இருப்பதாக குடும்பத்தார் கவனித்து கூறினால் உடனே மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது நல்லது. தூங்கும் முன் சுடு தண்ணீரில் குளித்துவிட்டு தூக்கம் பழக்கத்தை பின்பற்றினாலும் குறட்டை குறையலாம்.

படுக்கையறை சுத்தம் : படுக்கையறை சுற்றிலும் தூசிகளாக இருந்தால், தலையணை , போர்வை சுத்தமாக இல்லாமல் தூசியாக இருந்தாலும் குறட்டை வரும். எனவே தலையணைகளை 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்றுவது நல்லது. அறையையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

நீர்ச்சத்து இன்மை : உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும் குறட்டை வரும். எனவே தண்ணீர் நிறைய குடியுங்கள். உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கச் செய்வதால் குறட்டையைத் தவிர்க்கலாம்.

Related posts