கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா

பிராண முத்ரா

கல்லீரலை நன்கு இயங்கும் பிராண முத்ராவை பயிற்சி செய்யுங்கள். இந்த முத்திரை செய்வதால் கல்லீரலை இயக்கம் நன்றாக இருக்கும் உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும்.

பிராண முத்திரை செய்முறை :

ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து கொள்ளவும், தரையில் அமர முடிந்தால் தரையில் ஒரு விரிப்பு விரித்து சுகாசனத்தில் நிமிர்ந்து அமரவும்.

பிராண முத்ரா

முது கெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி ஒரு நிமிடம் இயல்பாக நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும். பின் சுண்டு விரலையும், மோதிரவிரலையும் மடித்து படத்தில் உள்ளதுபோல் வைத்து பயிற்சி செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை, மதியம், மாலை சாப்படுவதற்கு முன்பாக பயிற்சி செய்யவும்.

நமது கைவிரல்கள் உடலில் உள்ள பஞ்ச பூதத்தின் தன்மைகளை கட்டுப் படுத்துகின்றது. சுண்டு விரல் நீர் மூலகம், மோதிர விரல் நிலமூலகம், பெருவிரல் நெருப்பு மூலகம். நீர் நிலம் இதனுடன் நெருப்பு மூலகம் இணையும் பொழுது லிவருக்கு நல்ல பிராண சக்தியோட்டம் கிடைக்கிறது. அதில் உள்ள குறை பாடுகள் நீங்குகின்றது.

இந்த முத்திரையை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயிலலாம். இதற்காக நீங்கள் செலவு செய்தது ஐந்து நிமிடம்தான். ஆனால் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம்.

கல்லீரலின் இயக்கம் நன்றாக இருக்கும் உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். கண் நரம்புகள் நன்றாக இயங்கும்.

Related posts