பருத்தி ஆடைகள், குடை, தண்ணீர்…. கொளுத்தும் வெயிலை சமாளிக்க அரசின் அட்வைஸ்…!

கோடை வெயில் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறை அரசு செயலாளர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தொழில் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக்கல்வித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் தலைமைச்செயலாளர் விரிவான அறிவுரைகளை வழங்கினார்.

இந்த அறிவுரைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை தொகுத்து அனைத்து துறைகளுக்கும் வழங்கவேண்டும் என்றும், தொடர்ச்சியான ஆய்வுக்கூட்டங்கள் மூலம் இவை பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கோடை வெப்பத்தை சமாளிக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய்த்துறை ஆணையர் பிரபாகர்,  “உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அவசியமான பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடிநீரை கையுடன் எடுத்துச் செல்லவேண்டும். ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கவும். இந்த பருவகாலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவை உண்ணுங்கள். நல்ல காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருக்கவும்.

மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும். வெளியில் செல்லும்போது காலணிகளை அணியவேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்லவும். உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும்போது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும். சிறிய குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் மதிய வேளையில் (12 மணி முதல் 3 மணி வரை) வெளியே செல்வதை தவிர்க்கவும்”  என தெரிவித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment