பனிக்கால அழகுப் பராமரிப்பு

பனிக்கால அழகுப் பராமரிப்பு

குளிர்காலத்தில் சோப்பு பயன்படுத்தக் கூடாது. கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு, ஆரஞ்சுபழத்தோல் மூன்றையும் சம அளவு எடுத்து உலரவைத்து மெஷினில் அரைத்துக்கொள்ளவும். குளிக்கும்போதும், முகம் கழுவும்போதும் சோப்புக்குப் பதில் இந்தப் பொடியை மட்டுமே உபயோகிக்கவும்.

இதே பொடியை சாதம் வடித்த கஞ்சியில் குழைத்து மறுபடி அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி வெதுவெதுப்பான சூட்டில் தலைக்குத் தேய்த்து அலசலாம். ஷாம்பூ தவிர்க்கவும்

பனிக்கால அழகுப் பராமரிப்பு

தேன், நெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய், மஞ்சள்தூள் ஆகியவற்றைக் கலந்து பாத வெடிப்புகளில் தடவி வந்தால் பனிக்கால வெடிப்பு மறையும்.

ஆலிவ் ஆயிலில் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து அடித்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறியதும் வெதுவெதுப்பான நீரில் கடலை மாவுக் கலவையை உபயோகித்துக் கழுவவும்.

கிளிசரினும் பன்னீரும் கலந்த கலவையை இரவில் கால் விரல்களுக்கு இடையே தடவிக்கொண்டு படுத்தால் பனிக்காலத்தில் வரும் சேற்றுப்புண் சரியாகும்.

உதடுகளுக்கு பாலாடை அல்லது கிளிசரினும் பன்னீரும் கலந்த கலவை அல்லது வெண்ணெய் இந்த மூன்றில் ஒன்றை தினமும் தடவி மென்மையாக மசாஜ் செய்து வரலாம். உதடுகளின் வறட்சியும் வெடிப்பும் மறையும்.

Related posts