நேரத்தை மிச்சப்படுத்தும் ரெடி டு குக் உணவுகள்… ஆபத்தை அறிவீர்களா? | Time-saving ready-to-cook meals… Do you know the danger?

வீட்டில் சமைத்துச் சாப்பிட்ட மாதிரியும் இருக்க வேண்டும்… அதேசமயம் அதிக வேலையும் வைக்கக்கூடாது என எதிர்பார்க்கும் பலரின் சாய்ஸ் “ரெடி டு குக்’ உணவுகள். பிரியாணி முதல் கிரேவி வரை அனைத்துக்கும் இன்று இன்ஸ்டன்ட் மிக்ஸ் கிடைக்கிறது.

சமைக்கப்படாத ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டாக்கள், இட்லி, தோசைக்கான பாக்கெட் மாவுப் பொருள்கள், பணியாரம், வடை, பஜ்ஜி மாவுகள் போன்றவற்றின் விற்பனை சூப்பர் மார்கெட்டுகளில் அமோகமாக இருக்கிறது. ஆனால், பதப்படுத்தப்பட்ட இத்தகைய உணவுப்பொருள்களை வாங்கி சமைப்பதால் ஏற்படும் கேடுகள் பல என்கின்றனர், ஊட்டச்சத்து நிபுணர்கள்.

கற்பகம் வினோத்

கற்பகம் வினோத்

* ”பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மாவுப் பொருள்கள், ரெடி டு குக் சப்பாத்தி, பரோட்டாக்கள் எல்லாம் பல நாள்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவற்றைப் பதப்படுத்தியிருப்பார்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிடும்போது, உடல் இயக்கம் பாதிக்கப்படும். உதாரணத்துக்கு, தாகம் குறைவது, சிறுநீர் கழிப்பதில் சிக்கல், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.


Source link

Related posts

Leave a Comment