நீண்ட நாட்களாக முயற்சித்தும் தொப்பை குறையவில்லையா..? பிரபல நிபுணரின் டயட் டிப்ஸ்.!

அதிக கலோரிகள் அடங்கிய உணவுகளை குறைத்து கொள்ளுங்கள்: Fisico Diet Clinic-ன் நிறுவனரும் பிரபல டயட்டீஷியனுமான Vidhi Chawla கூறுகையில், தொப்பையை குறைத்து ஃபிளாட்டான வயிறை பெறுவதற்கான முதல்படி கலோரிகள் நிறைந்த உணவுகளை குறைவாக எடுத்து கொள்வதே. ஒயிட் பிரெட், பாஸ்தா மற்றும் வெள்ளை அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்ஸ் கொண்ட உணவுகள், குக்கீஸ், கேக் மற்றும் கேன்டி போன்ற சர்க்கரை உணவுகளையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த உணவுகள் அதிக கலோரிகளை கொண்டிருப்பதோடு உடல் எடை மற்றும் தொப்பையை எளிதாக அதிகரிக்க செய்கின்றன. இவற்றுக்கு பதில் காய்கறிகள், லீன் ப்ரோட்டீன்ஸ் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த முழு உணவுகளை டயட்டில் சேர்ப்பதில் கவனம் செலுத்தலாம். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது நீண்ட நேரம் முழுதாக உணர வைப்பதோடு தேவையற்ற அல்லது அதிக உணவு சாப்பிடுவதை தவிர்க்க உதவும் என்கிறார்.


Source link

Related posts

Leave a Comment