தொட்டில் என நினைத்து மைக்ரோவேவ் ஓவனில் குழந்தையை வைத்த தாய்… என்ன நடந்தது?! | Baby In US Dies After Mother Mistakenly Put Her In Oven Instead Of Crib

அமெரிக்காவின் மிசோரியில் உள்ள கன்சாஸ் நகரில் வசித்து வருபவர் 26 வயதான மரிகா தாமஸ். இவர் தன்னுடைய ஒரு மாத குழந்தையை தொட்டிலில் உறங்க வைப்பதாக நினைத்து தவறுதலாக உணவை சூடுபடுத்த பயன்படுத்தப்படும் மைக்ரோவேவ் ஓவனில் வைத்துச் சென்றிருக்கிறார்.

Baby (Representational Image)

Baby (Representational Image)
Photo by Omar Lopez on Unsplash

குழந்தைக்கு அணிவித்திருந்த ஆடையும், டயாப்பரும் கருகி எரிந்து, அதில் இருந்து புகை வரவே அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்துள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், குழந்தை மூச்சற்று இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டனர். சம்பவ இடத்தில் குழந்தையின் போர்வையும் கருகி இருந்ததைக் கண்டுள்ளனர். அவர்கள் அங்கு வருவதற்கு முன்னரே குழந்தை இறந்துள்ளது. 

குழந்தைகள் நலனுக்கு ஆபத்தை விளைவித்த செயலுக்காக தாய் மரிகா தாமஸ் மீது வழக்குப் பதிவு செய்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவ்வளவு பெரிய தவறு எப்படி நடந்தது..? எனத் தெளிவான விளக்கம் எதுவும் அதிகாரிகள் தரப்பில் அளிக்கவில்லை. இந்தச் சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழலும் குழப்பமாகவே இருக்கிறது. 

மரிகா தாமஸின் நண்பர் அவரது மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனத் தெரிவித்து இருக்கிறார். உறங்க வைப்பதாக நினைத்து குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் தாய் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Source link

Related posts

Leave a Comment