”துப்பட்டா இல்லாம போனா, கேர்ள்ஸே என்னைப் பார்த்து சிரிச்சாங்க”-காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 122 | Treatment for unequal breast size

அந்தப் பெண்ணுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இரண்டு மார்பகங்களுக்கும் இடையிலிருந்த வித்தியாசம் பளிச்சென்று தெரிந்தது. அதன் காரணமாகவே அவர் பல வருடங்களாக திருமணத்தைத் தள்ளிப்போட்டு கொண்டே வந்திருக்கிறார். ‘ஸ்கூல் டேஸ்ல லேசா தான் வித்தியாசம் தெரிஞ்சுது டாக்டர். வளர வளர சரியா போயிடும்னு வீட்ல எல்லாரும் சொன்னாங்க. நானும் அதை நம்பிட்டு நிம்மதியா இருந்தேன். தவிர, யூனிஃபார்ம்ல துப்பட்டா போடுறதால இந்த வித்தியாசம் பெருசா யாருக்கும் தெரியலை. ஆனா, காலேஜ் போறப்போ மார்டர்னா துப்பட்டா இல்லாம டிரெஸ் போட ஆரம்பிச்சேன். கூடப் படிக்கிற கேர்ள்ஸே என்னைப் பார்த்து சிரிக்க ஆரம்பிச்சாங்க. அப்போ தான், என்னோட பிரெஸ்ட் வித்தியாசம் ரொம்ப வெளிப்படையா தெரியுதுங்கிறது எனக்குப் புரிஞ்சுது. அன்னிக்கு காலேஜ் பாத்ரூமுக்குள்ள போய் அழுதேன். அதுக்கப்புறம் ஷால் இல்லாம நான் டிரெஸ் பண்றதே இல்ல. இப்போ நான் வொர்க் பண்ணிட்டிருக்கேன். எப்பவாவது புடவை கட்டணும்னாலே பயமா இருக்கும். பிளவுஸ் தைக்கக் கொடுக்கிறப்போ பிரெஸ்ட் வித்தியாசம் டெய்லருக்கு தெரிஞ்சிடுமோன்னு பதற்றமா இருக்கும். இதுக்கு பயந்துகிட்டே கல்யாணத்தையும் தள்ளிப் போட்டுட்டே வர்றேன். எனக்கு ஹெல்ப் பண்ணுங்க டாக்டர்’ என்று கண்கலங்கினார்.

அவருக்குத் தேவை அறுவை சிகிச்சை. பெரிதாக இருக்கிற மார்பகத்தின் பகுதியில் சிறிய அளவில் கட் செய்து, சிறிதளவு கொழுப்புப்பகுதியை நீக்கித் தையலிட்டோம். இந்தப் பகுதியில் அறுவை செய்தால், வெளியே தெரியாது. பாலுறுப்புகள் தொடர்பான பிரச்னைகளுக்கும் தேவையான மருத்துவ தீர்வுகள் இருக்கின்றன. பிரச்னைகளை மனதில் வைத்துப் புழுங்கிக்கொண்டே இருக்காமல், திருமணத்தைத் தள்ளிப்போடாமல், மருத்துவ உதவியை உடனடியாக நாடுங்கள்” என்கிறார் டாக்டர் காமராஜ்.


Source link

Related posts

Leave a Comment