சீனாவில் என்ன நடக்கிறது..? குழந்தைகளை பாதிக்கும் மர்ம நோய்கள்; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்..! | Pneumonia: Mysterious Diseases Affecting Children in China

சீனாவில் பரவும் மர்ம நோய்…

இந்த மாத தொடக்கத்தில், சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் செய்தியாளர் சந்திப்பில், “மக்களிடையே சுவாச நோய்கள் அதிகரித்து வருகின்றன. கோவிட் தொற்றை பூஜ்ஜிய நிலைக்குக் கொண்டுவரும் தீவிர நடவடிக்கைகளின் மூன்று வருட காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், சீனாவில் தற்போது காய்ச்சல் போன்ற நோய்களின் அதிகரிப்பு உள்ளது.  

கோவிட்-19 மட்டுமன்றி இன்ஃப்ளுயென்ஸா, மைக்கோபிளாஸ்மா நிமோனியா போன்ற பிற நோய்க்கிருமிகளும் பரவுவதற்கு கோவிட் நோய்த் தொற்றின் தளர்வு நடவடிக்கைகள் காரணமாக அமைந்ததுள்ளன”‘ என்று நோய்ப் பரவலுக்கு தளர்வு நடவடிக்கைகளை காரணமாகச் சுட்டிக் காட்டி உள்ளனர்.

நோய் எவ்வாறு பரவுகிறது, ஆய்வக முடிவுகள், குழந்தைகளிடையே ஏற்படும் பாதிப்புகள் குறித்த கூடுதல் விவரங்களை உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் கேட்டுள்ளது. 

அதேசமயம் மக்களிடையே நோய் பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கான பொது சுகாதார ஆலோசனையையும் வழங்கி உள்ளது.

ஏற்கெனவே கோவிட் தொற்று சமயத்தில் சீனாவின் வெளிப்படையற்ற தன்மை குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து இருந்தது. தற்போது சீனாவிடம் கேட்டுள்ள விவரங்கள் அளிக்கப்படுமா என்பதை வரும் நாள்களில் தான் பார்க்க வேண்டும்.


Source link

Related posts

Leave a Comment