சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் இப்படி சாப்பிட்டால் சுகர் ஏறாது… மருத்துவர் தரும் டிப்ஸ்..!

கோடை காலம் தொடங்கினாலே மாம்பழ சீசன்தான். எங்கு திரும்பினாலும் மாம்பழம் விற்பனை களைகட்டும். காரணம் மாம்பழத்தை சுவைகக் வேண்டுமெனில் கோடைக்காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும். அதிலும் இது சுவை மிக்கது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்தியாவில் பங்கனப்பள்ளி முதல் அல்ஃபோன்சா வரை 1,500க்கும் மேற்பட்ட மாம்பழங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு வகை மாம்பழத்திற்கும் தனித்தனி சுவை உண்டு. இதெல்லாம் ஒருபுறம் இருக்க முன்பே சொன்னதுபோல் வயதானவர்கள் கூட மாம்பழத்தை பார்த்தால் குழந்தைபோல் சுவைப்பார்கள். அப்படியிருக்க சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாம்பழம் சாப்பிடலாமா வேண்டாமா என்ற சந்தேகம் எப்போதும் இருக்கும். இதைப் பற்றி நிபுணர்கள் என்ன ஆலோசனை கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.

இதுகுறித்து, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வெளியிட்டுள்ள கட்டுரையில் “ நீரிழிவு நோயாளிகள் மாங்காய் சாப்பிட்டால் அவர்களின் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதில்லை. அதேசமயம் மாம்பழம் சாப்பிட்டால் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. எனவே இதை தவிர்க்க மாம்பழத்தை சாப்பிட சில வழிகள் உள்ளன” என்று கூறியுள்ளார் டாக்டர். மோகன் (நீரிழிவு நோய் மருத்துவர்)

சர்க்கரை நோயாளிகளும் மாம்பழம் சாப்பிடலாமா..?

“உங்கள் குளுக்கோஸ் அளவு கட்டுப்பாட்டில் இருந்தால், நீங்கள் மாம்பழங்களை சாப்பிடலாம். ஆனால் அவற்றை சரியான நேரத்தில் மற்றும் சரியான முறையில் சாப்பிட வேண்டும். ஒரு மாம்பழத்தில் 15 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. மேலும் ஒரு நபர் மொத்தம் 30 கிராம் கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒரு பழம் சாப்பிடலாம்” என்கிறார் டாக்டர்.

“சில மாம்பழங்கள் மிகவும் இனிப்பாக இருக்காது. சில மாம்பழங்கள் மிகவும் இனிப்பாக இருக்கும். இருப்பினும், அவற்றை வாங்கும்போது நாம் அதன் சுவையை கணிக்க முடியாது. தோற்றத்தை மட்டுமே பார்த்து வாங்க முடியும். எனவே நீரிழிவு நோயாளிகள் மாம்பழங்களை அதிகமாக சாப்பிடுவதில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது,” என்கிறார் டாக்டர். மோகன்.

நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாம் என்பதற்கான காரணங்களை பதிவு செய்த உணவியல் நிபுணர் உஜ்வாலா பக்ஷி “நீரிழிவு நோயாளுக்கு மாம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்து பல வகைகளில் நன்மையளிக்கிறது. அதேசமயம் இரத்த சர்க்கரை அளவு மற்றும் பொட்டாசியம் போன்ற பிற காரணிகளையும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி சாப்பிட்டே ஆக வேண்டும் என்று ஆசை தூண்டினால் ஒரு முறை உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது” என்கிறார் உஜ்வாலா பக்ஷி.

Also Read | முலாம் பழம் இப்படி இருந்தால் வாங்காதீங்க.. நல்ல பழத்தை பார்த்து வாங்க டிப்ஸ்..!

நிபுணர்களின் கூற்றுப்படி, மாம்பழத்தில் 67% வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மாம்பழத்தில் மிதமான கிளைசெமிக் குறியீடு 55 உள்ளது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பானது. சர்க்கரை நோயாளிகள் தினமும் அரை கப் மாம்பழம் சாப்பிடலாம்.

“மாம்பழத்தை உண்பதற்கான சிறந்த வழி, அதை அப்படியே சாப்பிடாமல் தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து பின் துண்டுகளாக நறுக்கி அரை கப் சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதால் மாம்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. மேலும், பழத்தை வெட்டி சாப்பிடுவது உண்ணும் செயல்முறையை மெதுவாக்குகிறது. இதனால் திருப்தியும் கிடைக்கும். மாறாக, மாம்பழ ஜூஸ் குடிப்பதால், நாம் அதிகமாக சாப்பிட நேரிடும். அதோடு அது சர்க்கரை அளவையும் அதிகரிக்கக் கூடும். மேலும் பழத்தின் சுவையையும் அனுபவிக்க முடியாது,” என்று கூறினார்.

“நீரிழிவு நோயாளிகள் மாம்பழத்தை ஒரு நாளைக்கு அரை மாம்பழமாக மட்டுமே உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் அதைத் தாண்டி சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இது அனைத்தும் உங்களுக்கு இருக்கும் நீரிழிவு வகையைப் பொறுத்தது. “சிலருக்கு மாம்பழம் சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும், மற்றவர்களுக்கு மாம்பழம் சாப்பிட்ட பிறகு உயரும்” என்று டாக்டர். மோகன் கூறுகிறார். எனவே இவரும் மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி சாப்பிட பரிந்துரைக்கிறார்.

மாம்பழம் எப்போது சாப்பிடக்கூடாது..?

“ஒழுங்கற்ற இரத்த சர்க்கரை, அதிக பொட்டாசியம் அளவு உள்ளவர்கள் மாம்பழத்தை சாப்பிடவே கூடாது. சுகாதார நிபுணர்களின் ஆலோசனைப்படி மாம்பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும்” என்கிறார் உஜ்வாலா பக்ஷி.

டாக்டர் மோகன் ” சர்க்கரை முற்றிலும் கட்டுப்பாடில்லாமல் இருந்தால் மற்றும் சர்க்கரை அளவு ஏற்கனவே அதிகமாக இருந்தால், மாம்பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு அளவைக் குறைக்க வேண்டும்” அதற்கு பின் சாப்பிடலாம் என்கிறார்.

உஜ்வாலா பக்ஷி கூறுகையில், “மாம்பழம் ஒரு பருவகால பழம், அதை அனைவரும் ருசிக்க வேண்டும். மாம்பழத்தை விரும்புவோர் அளவோடு சாப்பிட வேண்டும். இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த, நீங்க தினமும் சாப்பிடும் உணவில் உள்ள மொத்த கார்போஹைட்ரேட்டை அளவிட வேண்டும். உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு இரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும். இப்படி நாளின் வெவ்வேறு நேரங்களில் இவ்வாறு கணக்கிட வேண்டும். அன்றைக்கு மாம்பழம் சாப்பிடுகிறீர்கள் எனில் உணவின் அளவை குறைக்கலாம். அதேபோல் சாப்பிட உடனே சாப்பிடாமல் சர்க்கரை அளவு குறைந்த பின் சாப்பிடலாம்”.

Also Read | சுகர் இருந்தால் பேச்சு குளறுமா..? அதிர்ச்சி தரும் மருத்துவரின் பதில்..!

“நீரிழிவு நோயாளி மாம்பழங்களைச் சாப்பிட்டால், மற்ற கார்போஹைட்ரேட்டுகளை (எ.கா. சாதம் அல்லது சப்பாத்தி) உட்கொள்வதைக் குறைக்கலாம், ஏனெனில் இது ஒட்டுமொத்த கிளைசெமிக் அளவைக் குறைக்க உதவும். மாம்பழம் பல ஊட்டச்சத்து நன்மைகளைக் கொண்டுள்ளது. கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயால், அவர்களின் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. எனவே, மாம்பழங்களின் அளவைக் குறைப்பது நல்லது” என்று டாக்டர். மோகன் கூறினார்.

மாம்பழம் சாப்பிட சரியான நேரம் எது..?

காலை நடைப்பயிற்சியின் போதும், உடற்பயிற்சியின் போதும், உணவின் போதும் பழங்களை உண்ணலாம். நீங்கள் மாம்பழ சாலட்டையும் சாப்பிடலாம், அதில் கொத்தமல்லி இலைகள், வெள்ளரிகள், கொட்டைகள், விதைகள் சேர்த்து சாப்பிடலாம். “உணவுடன் மாம்பழம் சாப்பிடுவது நல்லது, ஏனெனில் அந்த நேரத்தில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உயராது,” என்கிறார் டாக்டர் மோகன். உணவுக்குப் பிறகு மாம்பழத்தை இனிப்பாக சாப்பிடக் கூடாது என்கின்றனர் நிபுணர்கள்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment