சன் ஸ்கிரீன் உபயோகித்தால் முகத்தில் வெள்ளைப் படிமம் ஏன்… தீர்வு உண்டா?|Are there any ways to prevent white patches on the face while using sunscreen?

வீட்டுக்குள் இருக்கும்போது குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கொரு முறை சன் ஸ்கிரீன் உபயோகிக்கத் தேவையில்லை. குறைந்தபட்சம் ஒருமுறை உபயோகித்தால் போதுமானது.  வெளியே செல்வோர், குறிப்பிட்ட நேரத்துக்கொரு முறை சன் ஸ்கிரீனை ரீ அப்ளை செய்ய வேண்டும்தான்… ஆனால் நடைமுறையில் அது பலருக்கும் சாத்தியமில்லை.

வீட்டில் இருப்பதால் சன் ஸ்கிரீன் தேவையில்லை என பலரும் நினைக்கிறார்கள். அப்படியல்ல…. துணி உலர்த்த, தோட்டத்தைப் பராமரிக்க, அருகிலுள்ள கடைக்குச் செல்ல…. இப்படி ஏதேனும் காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வருவோம். 

சன்ஸ்கிரீன்

சன்ஸ்கிரீன்

காலையில் 7 மணிக்கு வாக்கிங் செல்வதானால்கூட சன் ஸ்கிரின் தடவுவது அவசியம். அதை மறுபடி மறுபடி தடவிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை. அதுவே நீங்கள் மிகவும் இருட்டான அறையில்தான் இருப்பீர்கள் என்றால் அந்தச் சூழலில் சன் ஸ்கிரீன் தேவைப்படாது.


Source link

Related posts

Leave a Comment