குழந்தைகளுக்கான சத்தான 4 உணவுகள்

குழந்தைகளுக்கான சத்தான 4 உணவுகள்

நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் என்ற பொன்மொழியை நாம் அறிந்திருப்போம். இவ்வாறு வாழவேண்டும் என்றால் சிறுவயதில் இருந்தே சத்தான உணவு முறையை மேற்கொள்ள வேண்டும். ஆனால் சில குழந்தைகள் சத்தான உணவு வகைகளின் சுவைப்பிடிக்காமல் அவற்றை முழுமையாக புறக்கணிப்பதுண்டு. தாய்மார்கள் இதற்கு கவலைப்பட அவசியம் இல்லை இங்கு குழந்தைகளை விரும்பி சாப்பிடக்கூடிய சத்து மிகுந்த ருசியான 4 வகை உணவுகளையும், அதன் செய்முறை விளக்கங்களையும் பகிர்த்துள்ளோம்.

ஒரு வயது சிறு குழந்தைகளுக்கான உணவுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவு. ஏனெனில் தாய்ப்பாலில் மட்டுமே அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே பாலூட்டும் தாய்மார்கள் தங்களுடைய சரிவிகித உணவுகளில் பாதாம், வெந்தயம், வெந்தய கீரை, பால், பருப்பு வகை போன்றவற்றை சீராக எடுத்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் செல்ல குழந்தைகளுக்கான 4 வகை ருசியான உணவுகளின் செய்முறை விளக்கங்களை தெரிந்து கொள்வோம் வாங்க.

கேரட் – பனங்கற்கண்டு கூல் :

குழந்தைகளுக்கு ஒரு முதல் சிறந்த உணவை கேரட் உருவாக்குகிறது. கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இது ஒரு இனிப்பு சுவையை கொண்டுள்ளது என்பதால் குழந்தைகள் முகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

கேரட் – பனங்கற்கண்டு கூல்

தேவையான பொருட்கள்:

 • கேரட் – 1
 • பனங்கற்கண்டு – சிறிதளவு

செய்முறை:

கேரட்டை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். வெட்டியா இந்த கேரட் துண்டுகளை 10 முதல் 12 நிமிடங்கள் வரை வேகவைத்து கொள்ளவும்.

பின்பு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அவற்றில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் சிறிதளவு பனங்கற்கண்டை சேர்த்து கிளறுங்கள். பனங்கற்கண்டு கரைந்ததும் வடிகட்டி கொள்ளவும்.

பிறகு கேரட் வெந்ததும் அவற்றை நன்றாக மசித்து கொள்ளவும், பின்பு சிறிதளவு பனங்கற்கண்டு சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான கேரட் – பனங்கற்கண்டு கூல் தயார் உங்கள் செல்ல குழந்தைக்கு இந்த உணவை அளிக்கவும்.

அவகேடா மசியல்:

தேவையான பொருட்கள்:

 • நன்கு பழுத்த அவகேடா – ஒன்று
 • தாய்ப்பால் அல்லது பசும் பால் – தேவைக்கேற்ப

அவகேடா மசியல் செய்முறை:

அவகேடா மசியல்

அவகோடாவை நன்கு கழுவி அவற்றில் இருக்கும் கொட்டைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

பின் வெட்டி துண்டுகளை மிக்சியில் மாவுபோல் அரைத்துக்கொள்ளவும்.

பிறகு தாய்ப்பால் அல்லது காய்ச்சிய பசும்பால் மற்றும் அரைத்த கலவையை சேர்த்து நன்றாக கூல் செய்தும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அல்லது சிறிதளவு தண்ணீர் விட்டு மசியலாக்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

அவகேடாவில் நல்ல கொழுப்புச்சத்துக்கள் உள்ளதால், குழந்தைகளுக்கு உடல் மற்றும் மூளை வளர்ச்சியை தூண்ட உதவும்.

ஆப்பிள் கூழ்:

தேவையான பொருட்கள்:

 • ஆப்பிள் (தோலுரித்தது) – 1
 • தண்ணீர் – சிறிதளவு
 • தேன் அல்லது சர்க்கரை – விருப்பத்திற்கு

செய்முறை:

ஆப்பிள் கூழ்

தோலுரித்த ஆப்பிளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 10 நிமிடம் தண்ணீரில் வேகவைக்கவும்.

பின்பு வேகவைத்த ஆப்பிளை மிக்சியில் நன்கு கூல் போல் அடித்து கொள்ளவும்.

அரைத்த கலவையை ஒரு சுத்தமான கிண்ணத்தில் மாற்றி கொள்ளவும். பின்பு சுவையை மேல் கூட்ட தேன் அல்லது சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.

வாழைப்பழம் இட்லி:

தேவையான பொருட்கள்:

 • வாழைப்பழம் – 1
 • அவல் – 1/4 கப்
 • வெல்லம் அல்லது சர்க்கரை – 1/4 கப்
 • ரவை – 1/4 கப்
 • ஊற வைத்த பாதாம் – 2

செய்முறை:

அவலை 5 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.

பின் ஊறவைத்த அவல், துண்டாகிய வாழைப்பழம், பாதாம், சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து மிக்சியில் இட்லி மாவு பதத்திற்கு அரைத்து, ரவையை அதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி, ஒரு மணி நேரத்திற்கு பின்பு இட்லி பாத்திரத்தில் இட்லி போல் ஊற்றி வேகவைக்கவும். சத்தான சுவையான வாழைப்பழ இட்லி தயார்.

வாழைப்பழம் இட்லி

மேற்கண்ட அனைத்து உணவுகளும் குழந்தைகளுக்கு சத்தான சுவையான உணவு வகை என்பதால். அச்சம் இல்லை உங்கள் குழந்தைகளுக்கு செயற்கையான பதப்படுத்தப்பட்ட உணவுகளை சிறு வயதிலேயே தவிர்த்து. இம்மாதிரியான இயற்கை உணவுகளை  அவர்களுக்கு அறிமுகப் படுத்துங்கள்.

Related posts