`குரல் முக்கியம் பிகிலு!’ – மாஸ்டர் வாய்ஸ் செக் அப்: சென்னையில் புதிய முயற்சி..! | Voice Wellness Clinic – New launch in Chennai

“அவங்க குரல் கிளி மாதிரி இருக்கும்’, ‘அவரு பேசுனாலே கணீர்னு இருக்கும்’, ‘தொண்டை கட்டிடுச்சு…அதனால தான் குரல் இப்படி இருக்கு’ என்று நம்மை அறியாமலே குரல் மீது அதிக ஈர்ப்பும், கவனமும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இப்படிப்பட்ட குரலைப் பராமரிக்க சென்னையில் உள்ள ‘The Base ENT’ மருத்துவமனையில் புதியதாக ‘Voice Wellness Clinic’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ENT சர்ஜன் டாக்டர் நரேந்திரன்

ENT சர்ஜன் டாக்டர் நரேந்திரன்

Voice Wellness Clinic குறித்தும், குரல் பராமரிப்பு குறித்தும் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவர் நரேந்திரன் கூறுகிறார்…

”எல்லாருக்கும் குரல் என்பது மிக முக்கியம். அதுவும் மேடைப் பேச்சாளர்கள், பாடகர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு குரல் இல்லாமல் வேலையே இல்லை. அதனால் இவர்களுக்கு தொண்டை கட்டல், தொண்டை அடைத்தல், தொடர்ந்து பேசும்போது இருமல், குரல் கம்மல் ஆகிய பிரச்னைகள் இருந்துகொண்டே தான் இருக்கும். இந்தப் பிரச்னைகள் மிகவும் மோசமாகும்போது தான் இவர்கள், டாக்டர்களிடமே செல்வார்கள்.


Source link

Related posts

Leave a Comment