காமசூத்ரா சொல்லும் `யோனிப்பொருத்தம்' Vs இந்தக்கால கெமிஸ்ட்ரி… – காமத்துக்கு மரியாதை – 142

திருமண பந்தத்தில் நுழையவிருக்கிற ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுறுப்புகள் ‘சமரத’மாக, அதாவது பொருத்தமாக இருக்க வேண்டும் என்கிறது காமசூத்ரம். அது என்ன சமரதம்? வாத்ஸாயனரின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், தாம்பத்திய உறவின்போது புணர்ச்சி உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று இறுக்கமாக இருக்க வேண்டும். அதற்குக் கணவன், மனைவி புணர்ச்சி உறுப்புகளின் அகல, நீள மற்றும் ஆழ அளவுகள் பொருத்தமாக இருக்க வேண்டும். ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், மனைவியின் புணர்ச்சி உறுப்பின் ஆழத்துக்கு ஏற்றபடி கணவனின் புணர்ச்சி உறுப்பின் நீளம் இருக்க வேண்டும். அப்படியில்லாதபோது இருவருக்குமே தாம்பத்திய உறவில் திருப்தி கிடைக்காது. இந்த விஷயத்தைத்தான் `யோனிப்பொருத்தம்’ மூலம் கண்டறிவதாக காமசூத்ரா சொல்கிறது.

Sex Education

இதுபற்றி மனநல மருத்துவர் ஷாலினி பேசும்போது, ”கல்யாணம் செஞ்சுக்கப்போற ஆணுக்கும் பெண்ணுக்கும் செக்ஸுவலி கெமிஸ்ட்ரி நல்லா இருக்குமான்னு தெரிஞ்சுக்கிறதுதான் யோனிப் பொருத்தம். ஆணோ, பெண்ணோ சிலருக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் அதிகமிருக்கும்; சிலருக்கு குறைவா இருக்கும். இதைத் தெரிஞ்சுக்கிட்டு, யாருடன் யாரை சேர்க்கணும்கிறதைக் கண்டுபிடிக்கிற ஒரு வழியாத்தான் நான் யோனிப் பொருத்தத்தைப் பார்க்கிறேன். இது திருமணத்துக்கு மிக மிக தேவைங்கிறதுதான் என்னோட கருத்தும். ஆனா, இதை சம்பந்தப்பட்டவங்களுடைய இயல்பை வெச்சுதான் கண்டுபிடிக்க முடியும்.

உதாரணத்துக்குச் சொல்லணும்னா, பெற்றோர் பார்த்து வைக்கிற திருமணங்கள்லகூட நிச்சயத்துக்குப்பிறகு கிடைக்கிற கேப்ல சிலர் ‘செக்ஸ் டாக்’ வரைக்கும் பேசி, நல்லா கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆன பிறகு கல்யாணம் செஞ்சுப்பாங்க. சிலர், இந்தக் காலத்திலும் ‘நீ சாப்பிட்டியா; நீங்க சாப்பிட்டீங்களா’ங்கிற அளவுலேயே பேசிட்டு கல்யாணம் பண்ணிக்கிறாங்க. ‘உனக்கு என்ன கலர் பிடிக்கும்’னு கேட்கிறதையே பெரிய பகிர்தலா நினைச்சுக்கிற சிலரும் இந்தத் தலைமுறையில இருக்காங்க. நம்புறதுக்கு கஷ்டமா இருந்தாலும் நான் சந்திச்சுட்டு வர்ற உண்மை இது. இவங்களுக்கு செக்ஸ் தொடர்பா என்ன விழிப்புணர்வு இருந்துட முடியும்? சிலர் அப்படியே எதிர்ப்பதமா ‘அதான் நிச்சயமாயிடுச்சுல்ல’ என்று டாப்லெஸ் போட்டோ கேட்குற அளவுக்கு, அனுப்புற அளவுக்கும் இருக்காங்க. ரெண்டுமே அதிகப்படிதான்.

Dr. Shalini

முதல் இரண்டு வகையில், நாகரிகம் பார்த்து செக்ஸ் டாக் இல்லாம இருந்துட்டு, திருமணத்துக்குப் பிறகு செக்ஸ் லைஃப்ல சந்தோஷமா இருக்காங்கன்னா நல்லது. அப்படியில்லாம, குத்துமதிப்பா செக்ஸ் பண்ணிட்டோ அல்லது எனக்கு மட்டும் உச்சக்கட்டம் கிடைச்சா போதும்னோ ஆண் இருந்தா பெண் நிலைமை கஷ்டம்தான். மூன்றாவது வகையில் அடக்கி வெச்சதையெல்லாம் தனக்குன்னு ஒரு பொண்ணு நிச்சயமானதும் வெளிக்காட்டுறானா, அல்லது அந்தப் பெண்ணை செக்ஸ் டாய் மாதிரி பயன்படுத்துவானா அப்படிங்கிறது திருமணத்துக்குப் பின்னாடிதான் தெரிய வரும். இந்த விஷயங்களை ஓரளவுக்காவது முன்கூட்டியே தெரிஞ்சுக்கணும்னா பரஸ்பரம் நிறைய பேசணும். நிச்சயம் செஞ்ச திருமணத்தை நிறுத்துற பேச்சைப்பத்தி நான் குறிப்பிடலை. சேர்ந்து வாழறதுக்கு தேவையான பேச்சுகளைப் பேசணும். பரஸ்பரம் உருவம் பிடிச்சிருக்கணும்; குணம் பிடிச்சிருக்கணும்; இவனோட/இவளோட ஒரே அறையை பகிர்ந்துக்க எனக்குப் பிடிச்சிருக்குன்னு மனசு சொல்லணும். அதுக்காக மனசு கொஞ்சம் ஏங்கவும் செய்யணும். முக்கியமா, பரஸ்பரம் உடல்களைப் பகிர்ந்துக்கிறதை பத்தி யோசிக்கிறப்போ இவன்கூடவா/இவகூடவான்னு அருவருப்பு வரவே கூடாது. அப்படி வந்தா, ரெண்டு பேருக்கு நடுவுல யோனிப்பொருத்தம் இல்ல. அதாவது, கெமிஸ்ட்ரி இல்லைன்னு அர்த்தம்” என்கிறார்.


Source link

Related posts

Leave a Comment