கண்ணீர் துடைக்க; கட்டிப்புடி வைத்தியம் செய்ய ஆண்கள் வாடகைக்கு… ஜப்பானில் புதிய சேவை..! | People Renting Handsome Weeping Boys To Wipe Away Tears

இந்தச் சேவையை நிறுவிய ஹிரோகி டெராய், “உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படும்போது அதனை பொறுத்துக் கொள்வதை மட்டும் செய்யாமல், தழுவி அரவணைக்கப்பட வேண்டும் என நினைக்கிறன்.

ஜப்பானியர்கள் வீட்டில் மட்டுமல்ல, பணியிடத்திலும் கண்ணீர் சிந்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் வேலையில் அழும்போது, மிகவும் எதிர்மறையான கருத்து உருவாகலாம். சக ஊழியர்கள் கூட உங்களை அணுகத் தயங்கலாம்.

அழுகை (சித்தரிப்பு படம்)

அழுகை (சித்தரிப்பு படம்)
pixabay

தொழில்சார் சூழல்களில் பாதிப்பை ஏற்றுக்கொள்வது எமோஷனல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். இது பொது இடங்களில் உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காண்பிப்பதில் உள்ள சமூக சிக்கல்களையும் எதிர்கொள்ளும்’’ என்று கூறியுள்ளார்.

இது தவிர்த்து பாலியல் இல்லாத அரவணைப்பு சேவைகள் மற்றும் வாடகை நண்பர் சேவைகள் போன்ற வித்தியாசமான சேவைகளும் டோக்கியோவில் அதிகரித்து வருகின்றன. 

இது போன்று நீங்கள் கேள்விப்பட்ட வித்தியாசமான சேவைகள் உண்டா?… கமென்ட்டில் கூறுங்கள்!


Source link

Related posts

Leave a Comment