உதிரும் முடிகளை பாலிதீன் பைகளில் சேமிப்பேன்… ஏன் தெரியுமா? – உலகின் மிக நீளமான முடி உடைய பெண்..! | Indian Woman With Longest Hair sets Guinness World Record

நீளமான முடியின் ரகசியத்தைப் பகிர்ந்துள்ளவர், தனது தலைமுடியை வாரத்திற்கு இரண்டு முறை கழுவுவதாகக் கூறியுள்ளார். நீளமான முடியைக் கழுவவே 30 – 45 நிமிடங்கள் வரை ஆகிறது. இதனைத் தாண்டி தலையை உலர்த்தி, ஜடை போட மூன்று மணிநேரம் வரை பிடிக்கிறது.

ஒரு நாள் எனக்கு அதிகமாக முடி உதிர்வு ஏற்பட்டது. உதிரும் முடிகளை கீழே போடுவது என்னை இன்னும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அதிலிருந்து நான் எனது உதிரும் முடிகளை பாலிதீன் பைகளில் சேகரிக்கத் தொடங்கினேன். சுமார் 20 வருடங்களாக சேமித்து வருகிறேன். இப்போது என்னிடம் உதிர்ந்த நிறைய முடிகள் இருக்கின்றன.

1980-களில் இந்தி நடிகைகள் செய்து வந்த தனித்துவமான சிகை அலங்காரங்களால் ஈர்க்கப்பட்டேன். என் தலைமுடியைப் பார்க்கும் மக்கள் வியந்துபோவார்கள். சிலர் எனது தலைமுடியைத் தொட்டு என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். கூந்தல் பராமரிப்புக்காக நான் பயன்படுத்தும் பொருள்களை பற்றியும் கேட்கிறார்கள்.

ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா!

ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா!

இந்திய கலாசாரத்தில், தெய்வங்கள் பாரம்பர்யமாக மிக நீளமான முடியைக் கொண்டிருந்தன. நம் சமூகத்தில், முடி வெட்டுவது அபசகுணமாக கருதப்படுகிறது, அதனால்தான் பெண்கள் முடியை வளர்க்கிறார்கள். நீண்ட முடி பெண்களின் அழகை மேலும் அதிகரிக்கிறது.

எனது தலைமுடியை இன்னும் வளர்க்க நான் ஆசைப்படுகிறேன். எவ்வளவு காலம் அதைப் பராமரிக்க முடியும் என்று பார்க்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.  


Source link

Related posts

Leave a Comment