உடல் பருமனாக இருப்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம்..? மருத்துவர் தரும் எச்சரிக்கை..!

உடல் பருமன் மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் ஆகிய இரண்டுக்கும் உள்ள தொடர்பு குறித்தும், அதனை சமாளிப்பது குறித்தும் உஜாலா சிக்னஸ் குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆன சுச்சின் பஜாஜ் அவர்கள் விளக்கமாக எடுத்துரைக்கிறார்.

வெயில் சுட்டெரிக்கும் கோடைக் காலத்தில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை தான் ஹீட் ஸ்ட்ரோக். கோடையில் அதிக வெப்பநிலைக்கு வெளிப்படும் போது உடல் அதிக வெப்பமடைந்து விடுகிறது. இதன் காரணமாக நம் உடல் உறுப்புகள் செயலிழந்து போகக் கூடிய நிலையை ஏற்படுத்தும் ஒரு தீவிரமான உடல்நல பாதிப்பு தான் ஹீட் ஸ்ட்ரோக் ஆகும். மருத்துவர் சுச்சின் பஜாஜ் “இதற்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது மூளை பாதிப்பு, உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுத்து விடும்,” என்று கூறுகிறார்.

ஹீட் ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள்:

  • வேகமான இதயத்துடிப்பு
  • தலைவலி
  • தலைச்சுற்றல்
  • குழப்பம்
  • சுயநினைவு இழப்பு

இது யாரைத் தாக்கும்?

இது அனைவரையும் தாக்கும் என்றாலும் கூட, உடல் பருமன் இருப்பவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்த வகையில், 2018 ஆம் ஆண்டில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, உடல் பருமனாக உள்ள மாதவிடாய் நின்ற பெண்களுக்கும், ஆண்களுக்கும், உடல் வெப்பநிலைக்கும் இடையே நேர்மறையான தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டு இருந்தது.

ஏனென்றால், இவர்களின் உடலில் உள்ள அதிகப்படியான உடல் கொழுப்பானது ஒரு இன்சுலேட்டராக செயல்பட்டு, வெயில் சுட்டெரிக்கும் கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதை கடினமாக்கி விடுகிறது. அது மட்டும் அல்ல, உடல் பருமனாது நீரிழிவு, இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிற நோய்களுக்கு வழிவகுக்கும். இந்த நோய்களும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கின்றன.

உடல் பருமன் இருப்பவர்கள் ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து எப்படி தற்காத்துக் கொள்ளலாம்?

போதுமான தண்ணீர் குடித்தல்: கோடைக் காலத்தில் அடிக்கடி தண்ணீர் குடிப்பது அவசியம். அதே சமயம், மது, காபி போன்றவற்றைத் தவிர்க்கலாம். இவ்வாறு போதுமான நீர் குடுத்தால், உங்கள் உடலில் இருந்து வெப்பமானது வியர்வை வழியாக வெளியே செல்லும். உங்கள் உடல் உஷ்ணமாகாமல் இருக்கும்.

கோடைக்கு ஏற்ற ஆடைகளை அணிதல்: இறுக்கமாக இல்லாத லூஸ் ஃபிட்டிங் உடைய ஆடைகளை அணிய வேண்டும்.

வெப்பம் நிறைந்த நேரங்களில் அதிக கடின உழைப்பு மிகுந்த வேலைகளைத் தவிர்த்தல்: நீங்கள் வெளியே சென்று வேலைப் பார்த்தல், அடிக்கடி இடைவெளி எடுத்துக் கொள்வது அவசியம், ஸ்பிரே பாட்டில் ஒன்றை வைத்துக் கொண்டு புத்துணர்ச்சி பெறுங்கள். உங்களால் முடிந்தால், வெப்பம் நிறைந்த நேரத்தில், அதாவது காலை 11 மணி முதல் மாலை நான்கு மணி வரை வெளியே செல்வதை தவிர்த்து விடுங்கள். வெளியில் செல்ல வேண்டி இருந்தால், அடிக்கடி தண்ணீர் குடித்து நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள். நிழலில் அடிக்கடி ஓய்வு எடுப்பதை உறுதி செய்ய்யுங்கள்.

Also Reaf | Summer Health Tips | கோடைக் கால நோய்களை விரட்டியடிக்கும் கை வைத்தியங்கள்…!

சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்: சன் பர்ன் ஏற்படாமல் தடுக்க, குறைந்தபட்சம் SPF 30 உடனான வைட் ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம். வெயிலில் செல்ல வேண்டி இருந்தால், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. அதோடு, மண்டையில் வெயில் படாதவாறு தொப்பி மற்றும் குடை போன்றவற்றை பயன்படுத்தலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment