ஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க

ஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க

சிலர் என்ன தான் சாப்பிட்டாலும் உடல் எடை என்பது அதிகரிக்கவே, அதிகரிக்காது. இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான உணவுகள் மூலமாக உடல் எடையை அதிகரிக்கலாம். உடல் எடை அதிகரிக்க ஆரோக்கியமான இயற்கை பானத்தை தான் இப்போது நாம் தயார் செய்ய போகிறோம். இந்த பானம் எப்படி தயார் செய்ய வேண்டும். என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை பற்றி இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க…!

தேவையான பொருட்கள்:

  • வாழைப்பழம் – 1 (சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்)
  • பேரிச்சை பழம் – 4
  • பாதாம் – 5
  • பிஸ்தா – 8
  • முந்திரி – 5
  • ஏலக்காய் – 2
  • காய்ச்சிய பசும் பால் – முக்கால் டம்ளர்
  • உலர்திராட்சை – 10

செய்முறை:

ஒரு பெரிய மிக்க்ஷி ஜாரை எடுத்து கொள்ளவும். அவற்றில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழத்தை சேர்க்க வேண்டும்.

அதன் பிறகு நான்கு பேரிச்சை, ஐந்து பாதாம், எட்டு பிஸ்தா, ஐந்து முந்திரி, இரண்டு ஏலக்காய் மற்றும் முக்கால் டம்பளர் காய்ச்சிய பசும் பால் ஆகியவற்றை மிக்க்ஷி ஜாறில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். அரைத்த இந்த பானத்தை ஒரு டம்ளரில் ஊற்றி கொள்ளவும். இதனுடன் பத்து உலர்திராட்சையை சேர்த்து, தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் அருந்திவரலாம். ஒல்லியானவர்கள் ஒரே வாரத்தில் வேகமாக உடல் எடையை அதிகரிக்க உதவும் இந்த பானம்.

இந்த பானத்தில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களான வாழைப்பழம், முந்திரி, பாதாம், பிஸ்தா, பேரிச்சை மற்றும் பால் ஆகியவற்றில் கொழுப்பு சத்து மற்றும் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளதால், உடல் எடை குறைவாக உள்ளவர்கள், இந்த பானத்தை தினமும் ஒரு முறை அருந்திவர 10 நாளில் உடல் எடை அதிகரிக்க உதவும் இந்த ஆரோக்கியமான பானம்

Related posts