உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கனுமா..? இந்த உணவுகளை நினைத்துக்கூட பாக்காதீங்க..!

நம் உடலின் இரண்டாவது பெரிய மற்றும் முக்கிய உறுப்பாக இருப்பது கல்லீரல். உடலில் இருந்து நச்சுகளை நீக்குவது, ரத்தத்தை சுத்திகரிப்பது போன்ற பல செயல்பாடுகளை செய்கிறது கல்லீரல். தவிர புரதத் தொகுப்பு மற்றும் செரிமானத்திற்கு தேவையான பயோ கெமிக்கல் பொருட்களை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பணிகளையும் கல்லீரல் செய்கிறது.

எனவே கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்க சரியான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை பழக்கங்களை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது. கல்லீரல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை பற்றி நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். பிரபல ஊட்டச்சத்து நிபுணரான லோவ்னீத் பாத்ரா தனது இன்ஸ்டாவில் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு ஒமேகா நிறைந்த உணவுகள், வீட்கிராஸ், பச்சைக் காய்கறிகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் மஞ்சள் உள்ளிட்டவை நல்லது என குறிப்பிட்டுள்ளார்.

பிரபல காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் நிபுணரான டாக்டர் Rahul Dubbaka பேசுகையில், சில உணவுகள் கல்லீரல் ஆரோக்கியத்தை நேர்மறை அல்லது எதிர்மறையாக பாதிக்கும். அந்த வகையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் கொண்ட உணவை எடுத்து கொள்வது கல்லீரலில் கொழுப்பு குவிவதற்கு வழிவகுக்கும், இது இறுதியில் Non-alcoholic Fatty Liver Disease ஏற்பட வழிவகுக்கும். கல்லீரலில் பாதிப்புகள் ஏற்படாமல் அதன் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஊட்டச்சத்து மிக்க பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் லீன் ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்.

டாக்டர் Rahul Dubbaka கல்லீரலின் செயல்பாடுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அவை பின்வருமாறு:

  • கல்லீரல் உடலில் இருந்து நச்சுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்ற உதவுகிறது
  • கல்லீரலானது பித்தத்தை உற்பத்தி செய்கிறது, இது கொழுப்புகளை ஜீரணிக்க உதவுகிறது மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களையும் உறிஞ்சுகிறது
  • ஆற்றலின் மூலமான வைட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் கிளைகோஜனை சேமித்து வைக்கிறது கல்லீரல்
  • Albumin போன்ற முக்கிய புரதங்களை உற்பத்தி செய்வதற்கு கல்லீரல் பொறுப்பாகிறது

கல்லீரலை ஆரோக்கியமாக பாதுகாக்க உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகள்:

கல்லீரல் ஆரோக்கியத்திற்காக டாக்டர் Dubbaka ஷேர் செய்துள்ள உணவு பொருட்கள் பின்வருமாறு…

ஒமேகா-3 நிறைந்த உணவுகள்: ஃபேட்டி ஃபிஷ் (சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி உள்ளிட்ட மீன்கள்), அக்ரூட் பருப்புகள், ஆளிவிதைகள் மற்றும் சியா விதைகள் போன்ற ஒமேகா-3 நிறைந்த உணவுகள் கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து அதன் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

வீட் கிராஸ்: வீட் கிராஸ் எனப்படும் கோதுமை புல்லில் Chlorophyll உள்ளது. இது கல்லீரலை நச்சுநீக்கி அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

பச்சை காய்கறிகள்: கீரைகள், முட்டைக்கோஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகளில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன. இவைவீக்கத்தை குறைக்க மற்றும் கல்லீரலை பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும்.

Also Read | இரைப்பை வாதம் நோய் என்றால் என்ன..? அறிகுறிகள் மற்றும் காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!

சூரியகாந்தி விதைகள்: சூரியகாந்தி விதைகள் Vitamin E-ன் நல்ல மூலமாகும், இது கல்லீரல் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்க உதவும்.

மஞ்சள்: மஞ்சளில் உள்ள குர்குமின் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதோடு நம்மை கல்லீரல் பாதிப்பிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது.

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?

நாம் நமது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வழிகளை பட்டியலிட்டுள்ளார் லோவ்னீத் பாத்ரா. அவற்றை கீழே பார்க்கலாம்.

  • ஆரோக்கியமான மற்றும் சீரான டயட்டை பின்பற்றுங்கள்
  • கொழுப்பு, சர்க்கரை, உப்பு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துங்கள்
  • தினசரி தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்
  • மது பழக்கத்தை கட்டுப்படுத்துங்கள் மற்றும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க முக்கியத்துவம் கொடுங்கள்.

அதிகம் மது அருந்துவது கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மதுபழக்கத்தை முற்றிலும் தவிர்ப்பது அல்லது கட்டுப்படுத்துவது நல்லது என்கிறார் டாக்டர் Dubakka.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Source link

Related posts

Leave a Comment