உங்களுக்கு அளவுக்கு அதிகமா வியர்குதா..? இந்த நோய் பாதிப்பாக கூட இருக்கலாம்.. செக் பண்ணுங்க..!

நம் அனைவருக்குமே வியர்ப்பது என்பது இயல்பான ஒன்று, ஆனால் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் (Hyperhidrosis) என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான வியர்வை வெளியேறும் பிரச்சனையை அனுபவிக்கிறார்கள்.

இயல்பை விட அதிகமான வியர்வையானது இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அக்குள், முகம், கழுத்து, முதுகு, இடுப்பு, பாதங்கள் மற்றும் கைகள் போன்ற பகுதிகளில் ஏற்படுகிறது. கடும் வியர்வை வரும் அளவிற்கு அதிகம் உழைக்காவிட்டாலும், வெப்பத்திற்கு வெளிப்படாவிட்டாலும் கூட இவர்களுக்கு அதிகம் வியர்க்கிறது.

இதுபற்றி விளக்கமளித்துள்ள சீனியர் கன்சல்ட்டன்டான டாக்டர் ராஜேஷ் குமார், பிரைமரி ஹைப்பர்ஹைட்ரோசிஸ் பொதுவாக இளைமை பருவத்தில் ஏற்படுகிறது. இது ஓவராக்டிவ் பெர்ஸ்பிரெஷன் (overactive Perspiration) உறுப்புகளால் ஏற்படுகிறது, எனினும் இதற்கான குறிப்பிட்ட காரணம் முழுமையாக உணரப்படவில்லை. மறுபுறம் செகன்டரி ஹைப்பர்ஹைட்ரோசிஸ் ( Secondary hyperhidrosis) நிலையானது ஒரு அடிப்படை மருத்துவ நிலை அல்லது மருந்துகளின் பக்க விளைவுகளுடன் தொடர்புடையது. மேலும் இது ஹார்மோன் சமநிலையின்மை, மாதவிடாய், சில மருந்துகள், தொற்றுகள், நீரிழிவு நோய், தைராய்டு பிரச்சனை, உடல் பருமன் மற்றும் நரம்பியல் கோளாறுகள் உள்ளிட்ட பல காரணிகளால் ஏற்படலாம் என்றார்.

தொடர்ந்து பேசிய டாக்டர் ராஜேஷ் குமார், ஹைப்பர்ஹைட்ரோசிஸ் கண்டிஷனில் ஒருவரது உடலின் வியர்வை சுரப்பிகள் இயல்பை விட மிகையாக செயல்படுகின்றன, இதன் காரணமாக அவருக்கு பெரும்பாலும் மற்றவர்கள் விரும்பாத இடங்களில் அதிகம் வியர்க்கிறது. பிரைமரி ஹைப்பர்ஹைட்ரோசிஸ் நிலையானது ஓவராக்டிவ் நர்வஸ் சிஸ்டம் (overactive nervous system), எமோஷனல் ஸ்ட்ரஸ், பதட்டம், ஹீட் மற்றும் காரமான உணவுகள் போன்ற சில தூண்டுதல்களால் ஏற்படலாம். அதே நேரம் செகன்டரி ஹைப்பர்ஹைட்ரோசிஸ் அடிப்படை மருத்துவ நிலை அல்லது சில மருந்துகளை எடுத்து கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளுடன் தொடர்புடையது என்றார். இதற்கான சில பொதுவான காரணங்களில் ஹார்மோன் சமநிலையின்மை, மருத்துவ நிலைமைகள் மற்றும் சில மருந்துகள் அடங்கும் என்றாலும் போதைப் பொருள் அல்லது ஆல்கஹாலை கைவிடுவதன் விளைவாகவும் அதிகப்படியான வியர்வை பிரச்சனை ஏற்படலாம் என்றார்.

ஹைப்பர்ஹைட்ரோசிஸால் பாதிக்கப்பட்டவர்களிடம் பொதுவாக காணப்படும் அறிகுறிகளாக உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வியர்ப்பது, அடிக்கடி வியர்ப்பது, ஆடைகள் நனையும் அளவுக்கு வியர்ப்பது உள்ளிட்டவற்றை காணலாம். அதிகப்படியாக வியர்க்கும் பகுதிகளில் அரிப்பு அல்லது வீக்கம், உடல் துர்நாற்றம் மற்றும் தோல் நிறமாற்றம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட கூடும். ஹைப்பர்ஹைட்ரோசிஸ் பெரிதாக தீங்கு ஏற்படுத்தாத நிலை என்றாலும் வாழ்க்கை தரத்தை மோசமாக்கலாம். கடுமையான வியர்வையால் பாதிக்கப்படுபவர் வெளியில் ரிலாக்ஸாக செல்ல முடியாமல் social anxiety-யை அனுபவிக்கலாம் மற்றும் சங்கடமாக உணர நேரிடலாம் என்றார்.

அதிகப்படியான வியர்வை வெளியேறுவது பெரும் சிக்கலாக மாறும் அதற்கான காரணத்தைக் கண்டறிய உதவும் சில சோதனைகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

ஸ்டார்ச்-அயோடின் டெஸ்ட் :

இந்த சோதனையில் அதிக வியர்வையால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அயோடின் சொல்யூஷன் பயன்படுத்தப்பட்டு அதன் மீது சிறிதளவு ஸ்டார்ச் தெளிக்கப்படும். இந்த சொல்யூஷன் அதிகப்படியான வியர்வையின் போது டார்க் ப்ளூ-வாக மாறும்.

பேப்பர் டெஸ்ட் :

இந்த டெஸ்ட்டில் எந்த இடத்தில வியர்வையை உறிஞ்ச வேண்டுமோ அங்கே ஸ்பெஷல் பேப்பர் ஒன்று வைக்கப்படும். சிறிது நேரம் கழித்து எவ்வளவு வியர்த்திருக்கிறது என்பதை கண்டறிய அந்த ஸ்பெஷல் பேப்பர் எடை போடப்படும்.

சிகிச்சை…

மருத்துவரின் கூற்றுப்படி Focal Hyperhidrosisக்கு எந்த சிகிச்சையும் இல்லை. இதற்கான சிகிச்சை என்று பார்த்தால் அறிகுறிகளை குறைப்பதை மையமாக கொண்டதாக இருக்கிறது. அடிப்படை பிரச்சனை தணிந்தால், செகண்டரி ஹைப்பர்ஹைட்ரோசிஸுக்கு சிகிச்சையளிக்க முடியும். எனினும் இந்த நிலைக்கு சில வாழ்க்கை முறை மாற்றங்கள் அல்லது மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.

Also Read | அதிகப்படியான அக்குள் வியர்வையால் துர்நாற்றம் வீசுகிறதா..? இதை மட்டும் டிரை பண்ணுங்க..

அடிக்கடி குளிப்பது அல்லது காற்றோட்டமான ஆடைகளை அணிவது, வியர்வை சுரப்பிகளை மூட Antiperspirants மருந்துகள், வாய்வழி மருந்துகள், கிளினிக்கல்-கிரேட் க்ளாத் வைப்ஸ், போடோக்ஸ் ஊசி உள்ளிட்டவை பரிந்துரைக்கப்படலாம். அதிகப்படியான வியர்வை பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் தகுந்த சிகிச்சை பெற மருத்துவ நிபுணரை கலந்தாலோசிக்கலாம். மருத்துவர் பாதிக்கப்பட்டவரின் Hyperhidrosis தீவிரத்தை மதிப்பீடு செய்து அதற்கேற்ப பொருத்தமான மருந்துகளை பரிந்துரைக்கலாம் என்றார் ராஜேஷ் குமார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment