`இந்திய இளைஞர்களின் திடீர் மரணம்’… கோவிட் தடுப்பூசி காரணமா?! – விளக்கும் ஆய்வு தகவல்!|Research found the reason for young Indians sudden death

புதிதாக தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும்போது அதனை செலுத்திக் கொள்ளலாமா வேண்டாமா என்ற அச்ச உணர்வு பெரும்பாலான மக்களிடையே எழும். இதுதான் கோவிட் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட போதும் நிகழ்ந்தது.

இதனால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டு விடுமோ, உயிரைப் பறிக்கக்கூடிய ஆபத்து உண்டாகுமோ என்றெல்லாம் மக்கள் அச்சப்பட்டனர். சிலர் அரசின் கட்டாய அறிவிப்பு வரும் வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருந்தார்கள். இன்று வரை கூட சிலர் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கலாம். 

Corbevax vaccine for COVID-19 (Representational Image)

Corbevax vaccine for COVID-19 (Representational Image)

2021 அக்டோபர் 1 முதல்  2023 மார்ச் 31-க்கு இடைப்பட்ட காலத்தில் 18 – 45 வயதுடைய இளைஞர்கள் விவரிக்கப்படாத காரணங்களால் திடீரென இறந்தனர். இந்த இறப்புகள் கோவிட் தடுப்பூசிகளுடன் தொடர்புபடுத்தப்பட்டன. 

கோவிட்-19 தடுப்பூசிகள் 2020-ல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, அவற்றின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில் இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் (ICMR), 2021 முதல் ஆரோக்கியமான இளைஞர்களிடையே அதிகரித்த திடீர் இறப்பு குறித்து ஆய்வு செய்தது. இறந்த நபர்களின் 729 கேஸ்களும் ஆய்வு செய்யப்பட்டன.    

பெரிய ஆய்வில் இந்தியா முழுவதும் உள்ள 47 மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகள் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டன. ஓராண்டு, 5 மாத காலம் நீடித்த இந்த ஆய்வு முடிவுகள் நவம்பர் 21 வெளியிடப்பட்டன. 


Source link

Related posts

Leave a Comment