ஆட்டோ இம்யூன் கோளாறு என்றால் என்ன..? அறிகுறிகள் எப்படி இருக்கும்..?

ஆட்டோ இம்யூன் கோளாறுகளால் திரை பிரபலங்களான சல்மான் கான், சமந்தா, நிக்கி ஜோன்ஸ் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டனர். Autoimmune disorders என்பது நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலமே தவறாக நம் உடலை தாக்குவதால் ஏற்படும் நோய்கள் ஆகும்.

நோயெதிர்ப்பு மண்டலத்தின் முதன்மை செயல்பாடு பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக உடலைப் பாதுகாப்பதே. ஆனால் நம்முடைய வெள்ளை அணுக்களை கிருமிகள் என தவறாக நினைத்து நம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் இருக்கும் ஆன்டிபாடிகள் தாக்குவதால் ஆட்டோ இம்யூன் நோய்கள் ஏற்படுகின்றன.

பொதுவாக நம்முடைய நோயெதிர்ப்பு அமைப்பு பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்றவை வெளியில் இருந்து உடலுக்குள் ஊடுருவதை கண்டறிந்தவுடன், அவைற்றை எதிர்த்து போராட தற்காப்பு உயிரணுக்களின் படையை அனுப்புகிறது. நம் நோயெதிர்ப்பு மண்டலம் வெளியில் இருந்து வரும் செல்கள் மற்றும் நமது உடலுக்கு சொந்தமான செல்கள் என இரண்டையும் வேறுபடுத்தி அறிந்து கொள்ளும் தன்மை கொண்டது. ஆனால் இந்த ஆட்டோ இம்யூன் கோளாறு விஷயத்தில் நோயெதிர்ப்பு அமைப்பு நம் தோல் அல்லது மூட்டுகள் போன்ற உடலின் ஒரு பகுதியை அந்நியமாக உணர்ந்து, ஆரோக்கியமாக இருக்கும் செல்களை தாக்க கூடிய ஆட்டோ ஆன்டிபாடிஸ்களை உருவாக்குகிறது.

சில ஆட்டோ இம்யூன் கண்டிஷன்ஸ் டைப் 1 நீரிழிவு நோயில் கணையம் போன்ற ஒரு உறுப்பை குறிவைக்கின்றன. அதே நேரம் Systemic lupus erythematosus (SLE) அல்லது Lupus போன்ற பிற ஆட்டோ இம்யூன் கண்டிஷன்ஸ் முழு உடலையும் பாதிக்க கூடியவையாக இருக்கின்றன.

ஆட்டோ இம்யூன் டிஸ்ஸார்டர்களின் அறிகுறிகள்:

நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் கோளாறுகளால் ஏற்படும் பாதிப்பு ஒரு உறுப்புக்கு மட்டும் அல்ல என டாக்டர் விவேக் பால் சிங் கூறியுள்ளார். ஆட்டோ இம்யூன் நோய்கள் உடலின் பல பாகங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். டாக்டர் விவேக் பால் சிங்கின் கூற்றுப்படி, ஆட்டோ இம்யூன் நோயின் சில அறிகுறிகள் கீழே:

  • தசை மற்றும் மூட்டு வலி அல்லது பலவீனம், காய்ச்சல்
  • முடி உதிர்வு, தோல் அல்லது வாயின் உள்ளே ஒயிட் பேட்ச்சஸ் ஏற்படுவது, எடை இழப்பு
  • வயிற்று வலி, மலத்தில் ரத்தம் அல்லது சளி வெளியேறுவது, வயிற்றுப்போக்கு, இன்சோம்னியா, மயக்கம்
  • அதிக களைப்பாக உணருவது, மார்பு வலி, கை அல்லது கால்களில் கூச்ச உணர்வு
  • குமட்டல், ரேஷ் மற்றும் அரிப்பு, வேகமான அல்லது சீரற்ற ஹார்ட் பீட், பார்வை மங்கலாதல், கவனம் செலுத்துவதில் சிரமம்
  • வாய், கண்கள் அல்லது சரும வறட்சி

Also Read | ‘இப்படி ஒரு நோய்… நிறத்தை இழக்கிறேன்’ – நடிகை மம்தா மோகன்தாஸ் உருக்கம்

சிகிச்சை:

ஆட்டோ இம்யூன் கோளாறுகளை சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த முடியாது. ஆனால் ஹைப்பர்ஆக்ட்டிவ் இம்யூன் ரெஸ்பான்ஸை நிர்வகிக்கலாம். குறைந்தபட்சம் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கலாம் என்கிறது ஹெல்த்லைன். இப்யூபுரூஃபன் (மோட்ரின், அட்வில்) மற்றும் நாப்ராக்ஸன் (நாப்ரோசின்) போன்ற ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAIDs) மற்றும் இம்யூன்-சப்ரெஸிங் மருந்துகள் உள்ளிட்டவை இத்தகைய கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளாகும். சோர்வு, வலி, சரும வெடிப்பு மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகளை போக்கவும் சிகிச்சைகள் உள்ளன. ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவது மற்றும் தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலமும் பாதிக்கப்பட்ட நபர் தனது நல்வாழ்வை மேம்படுத்தி கொள்ளலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment