ஞாபகசக்தியை அதிகரிக்கும் அர்த்த சிரசாசனம்

ஞாபகசக்தி

அர்த்த சிரசாசனம் மாணவச் செல்வங்களுக்குகந்த மிக அற்புதமான ஆசனமாகும். இந்த ஆசனத்தை மாணவர்கள் மட்டுமல்ல, இல்லத்தரசிகள், பெரியவர்கள் அனைவரும் செய்யலாம்.

விரிப்பில் முதலில் வஜ்ராசனத்தில் அமரவும். அதில் இருந்து எழுந்து உச்சந்தலை தரையில்படும்படி வைத்து இரு கைகளையும் தலைக்குப் பின்னால் கோர்த்துக்கொண்டு இரு கால்கலையும் கால் பெருவிரல்கள் தரையில்படும்படி குன்றுபோல் மெதுவாக உயர்த்தவும். இந் நிலையில் சாதாரண மூச்சில் 20 விநாடிகள் இருக்கவும். பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும். இதுபோல் மூன்று முறைகள் செய்யவும்.

அர்த்த சிராசனம்

உடல் ரீதியான பலன்கள்

மூளை நரம்பு செல்களின் அழிவைத்தடுக்கும், நுண் இரத்தக்குழாய் அடைப்புகள் நீங்கும். தலைக்கு தேவையான இரத்த ஓட்டம் அளிக்கும். கண்பார்வை கோளாறு மறையும். பெரும்பான்மையான காது, மூக்கு, தொண்டை, பாதிப்புகள் அகலும். ஞாபகத்திறன் கூடும். பீனியல், பிட்யூட்ரி, தைராய்டுகளின் சுரப்பிகள் இயக்கம் சீர் பெறும். அதனால் ஞாபகசக்தி நன்கு வளரும். படித்தது உள்ளதில் பதியும். வகுப்பில் பாடம் நடத்தும் பொழுதும் ஆசிரியர் கூறுவது ஆழ்மனதில் பதியும். பரீட்சை எழுதும் பொழுது படித்தது மறக்காமல் நினைவுக்கு வரும்.சோம்பல் நீங்கும். மூளை செயல்கள் புத்துணர்வுடன் இயங்கும். மாணவச் செல்வங்களுக்குகந்த மிக அற்புதமான ஆசனமாகும்.

ஆன்மீக பலன்கள்: மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.

பயன்பெறும் உறுப்புகள்: தலை, முதுகு எலும்பு, கால்கள்.

இந்த ஆசனத்தை மாணவர்கள் மட்டுமல்ல, இல்லத்தரசிகள், பெரியவர்கள் அனைவரும் செய்யலாம். படிப்பவர்கள் பயிற்சி செய்தால் நுண்ணறிவு நன்கு இயங்கும். யாருக்கெல்லாம் ஞாபக மறதி உள்ளதோ அவர்கள் எல்லாம் பயிற்சி செய்து ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ளலாம்.

எச்சரிக்கை


இந்த ஆசனம் செய்து விட்டு, சாதாரண நிலைக்கு திரும்பும் போது தரையிலிருந்து தலையை மிக நிதானமாக உயர்த்தவும், படபடப்பு, இதயத்தின் இரத்த அழுத்த கோளாறு உள்ளவர்கள், முகம், தலை சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த ஆசனம் செய்யக் கூடாது.

கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா

Related posts