ஃப்ளூ காய்ச்சல்…அடுத்தவரிடம் தண்ணீர் வாங்கி குடிப்பதைத் தவிர்க்க மருத்துவர் அறிவுறுத்தல்! I To prevent the spread of flu fever, Doctor instructions!

ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகள், தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்குகிறார் பொது மருத்துவர் விஷால்.

“‘குளிர்காலத்தில் அதிகமாகத் தொற்று நோய்கள் பரவக்கூடும். பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய ஃப்ளூ காய்ச்சல் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பாதிக்கலாம்.

Influenza- A, B, மற்றும் C வைரஸ் மூலமாக இந்த நோய் பரவுகிறது. இது வைரஸ் நோய்த்தொற்று என்பதால் உடல் சோர்வு, சளி, மூக்கிலிருந்து நீர் வடிதல், தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல், உடல்வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்படும். தற்போது இன்ஃப்ளூயென்சா வைரஸ் மட்டுமன்றி H1N1 மற்றும் H3N2 ஆகிய வைரஸ் மூலமாகவும் ஃப்ளூ காய்ச்சல்கள் பரவி வருகின்றன.


Source link

Related posts

Leave a Comment