ஏழேழு ஜென்மத்திற்கும் நம்முடைய தலைமுறை செல்வ செழிப்போடு சிறப்பாக வாழ!

Varahi Amman

வாராஹி அம்மனை உண்மையாக மனமுருகி வழிபாடு செய்து வந்தால் நம்முடைய குடும்பம் செல்வ செழிப்போடு சீரும் சிறப்புமாக பல தலைமுறைகளுக்கு தழைத்தோங்கும். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம்முடைய குடும்பம் மட்டுமல்லாமல், நமக்கு அடுத்தடுத்து வரக்கூடிய தலைமுறைகளுக்கும் எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது, அவர்களுக்கு வறுமை இருக்கக் கூடாது, வாழ்க்கையை அவர்கள் நல்லபடியாக வாழ வேண்டும் என்றால், வாராஹி அம்மனை எப்படி வழிபாடு செய்வது என்பதைப் பற்றிய ஆன்மீக ரீதியான தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வாராஹி அம்மனை செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, அமாவாசை தினம், பௌர்ணமி தினம், பஞ்சமி திதி, இந்த நாட்களில் வழிபாடு செய்வது சிறப்பு. இதைத்தவிர்த்து உங்களால் வேறு எந்தக் கிழமையில் வழிபாடு வைக்கமுடியும் என்றாலும் வழிபாடு செய்யலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

உங்களுடைய வீட்டில் வாராகி அம்மனின் திருவுருவப் படத்தை வைத்து வழிபாடு செய்வதில் தவறு கிடையாது. நிறைய பேருக்கு பயம் இருக்கிறது. வாராஹி அம்மன் திருவுருவ படமாக வீட்டில் வைத்து வழிபடலாமா என்று. உங்களுக்கு மனதில் ஏதேனும் பயம் இருந்தால் இந்த படத்தை வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் ஏற்றக் கூடிய தீப ஒளியில் வாராஹி அம்மனை நினைத்து தரிசனம் செய்யுங்கள்.

ஒரு வெள்ளிக்கிழமையிலோ, செவ்வாய்க்கிழமையிலோ அல்லது பௌர்ணமி நாளிலோ அமாவாசை நாளிலோ ஒரு சிறிய கிண்ணத்தில் பனைவெல்லம் வையுங்கள். பனைவெல்லத்தை பூஜை அறையில் வைத்துவிட்டு, வாராஹி அம்மனுக்கு நிவேதனம் செய்ய வேண்டும். வீட்டில் தீபம் ஏற்றி வைத்து விட்டீர்கள். பனைவெல்லத்தை நிவேதனமாக வைத்து விட்டீர்கள். தீபத்தின் முன் அமர்ந்து வாராஹி அம்மனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வாராஹி அம்மனை மந்திரங்கள் தெரிந்தால் உச்சரிக்கலாம். இல்லையென்றால் ‘ஓம் வாராஹி தேவியை துணை’ என்ற மந்திரத்தை உச்சரித்து விட்டு, எனக்கு இருக்கும் கஷ்டங்கள், எதிரி தொல்லை, கடன் தொல்லை, பணப்பிரச்சனை, அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்க வேண்டும், என்னுடைய குடும்பம் ஏழு ஜென்மத்துக்கும் சந்தோஷமாக வறுமை இல்லாமல் தழைத்தோங்க வேண்டும் என்றும் வேண்டுதல் வைக்க வேண்டும்.

வேண்டுதலை முடித்துவிட்டு நிவேதனமாக வைத்த வெல்லத்தை கொண்டு போய் எறும்பு புற்று இருக்கக்கூடிய இடத்தின் அருகில் வைத்து விட்டு வாருங்கள். நீங்கள் வைத்த இந்த வெல்லத்தை அந்த எறும்பு எடுத்துச் செல்லும்போது, உங்களை மனதார வாழ்த்தும். அப்போதே நீங்கள் செய்த பாவத்திற்கான பிராயசித்தம் கிடைத்துவிடும். இதோடு மட்டுமல்லாமல் அந்த எறும்பு நீங்கள் வைத்த வெல்லத்தை இரண்டரை ஆண்டுகளுக்கு சேகரித்து வைத்துக்கொள்ளும்.

சேகரித்து வைத்த உணவுப் பொருளை ஒவ்வொருமுறை எறப்புகள் சாப்பிடும் போதும் உங்களுடைய கர்மவினைகள் குறைக்கப்படும். குறிப்பாக சனி பகவானால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தோஷங்களுக்கு நிவர்த்தி கிடைக்கும்.  ஒரே ஒருநாள் மட்டும் இந்த பரிகாரத்தை செய்து விட்டு அப்படியே விட்டு விட வேண்டாம். வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ உங்களுடைய வீட்டில் வாராஹி அம்மனை நினைத்து வழிபாடு செய்யும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

அதன்பின்பு உங்களுடைய வீட்டில் ஏற்படக்கூடிய மாற்றத்தை உங்களால் சீக்கிரத்தில் உணரமுடியும். கஷ்டங்களுக்கு படிப்படியாக விமர்சனம் கிடைக்கத் தொடங்கும். நீங்கள் நம்ப முடியாத அளவிற்கு உங்கள் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். நிம்மதி ஊற்றெடுக்கும். கஷ்டங்கள் நிறைந்த வீட்டில் வாராஹி அம்மன் காலடி எடுத்து வைத்துவிட்டால், அன்று முதல் அந்த வீட்டில் கஷ்டம் வெளியேறிவிடும். நம்பிக்கையோடு வாராகி அம்மனின் பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

Related posts