துன்பம் போக்கும் ஸ்ரீரங்கநாதாஷ்டகம்

Sri Ranganatha Ashtakam

திருமாலின் அவதாரங்களில் சிறந்ததாக கருதப்படும் ஸ்ரீராமபிரான் பூஜித்த பெருமை கொண்டது, இந்த ஸ்ரீரங்கம். ஸ்ரீரங்கநாதாஷ்டகத்தை தினமும் சொல்வதால் துன்பங்கள் பறந்தோடும்.

ஆநந்தரூபே நிஜபோதரூபே பிரஹ்ம ஸ்வரூபே ஸ்ருதிமூர்த்திரூபே
ஸஸாங்கரூபே ரமணீயரூபே ஸ்ரீரங்கரூபே ரமதாம் மநோ மே

காவேரிதீரே கருணாவிலோலே மந்தாரமூலே த்ருதசாருகேலே
தைத்யாந்தகாலே அகிலலோகலீலே ஸ்ரீரங்கலீலே ரமதாம் மநோ மே

லஷ்மீநிவாஸே ஜகதாம்நிவாஸே ஹ்ருத்பத்மவாஸே ரவிபிம்ப
வாஸே க்ருபாநிவாஸே குணவ்ருந்தவாஸே ஸ்ரீரங்கவஸே ரமதாம் மநோ மே

ப்ரமாதிவந்த்யே ஜகதேகவந்த்யே முகுந்தவந்த்யே ஸுரநாதவந்த்யே
வ்யாஸாதிவந்த்யே ஸநகாதிவந்த்யே ஸ்ரீரங்கவந்த்யே ரமதாம் மநோ மே

ப்ரஹ்மாதிராஜே கருடாதிராஜே வைகுண்ட ராஜே ஸுரராஜ ராஜே
த்ரைலோக்ய ராஜே அகிலலோக ராஜே ஸ்ரீரங்கராஜே ரமதாம் மநோ மே

அமோகமுத்ரே பரிபூர்ணநித்ரே ஸ்ரீயோகநித்ரே ஸஸமுத்ரநித்ரே
ஸ்ரிதைகபத்ரே ஜகதேகநித்ரே ஸ்ரீரங்கபத்ரே ரமதாம் மநோ மே

ஸசித்ரஸாயீ புஜகேந்த்ரஸாயீ நந்தாங்கஸாயீ கமலாங்கசாயீ
க்ஷீராப்திஸாயீ வடபட்ரஸாயீ ஸ்ரீரங்கஸாயீ ரமதாம் மநோ மே

இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம் புநர்நசாங்கம் யதி சாங்கமேதி
பாணௌ ரதாங்கம் சரணாம்பு காங்கம் யாநே விஹங்கம்ஸயநே புஜங்கம்

ரங்கநாதாஷ்டகம் புண்யம் ப்ராதருத்தாய ய: படேத்
ஸர்வாந் காமாநவாப்நோதி ரங்கிஸாயுஜ்யமாப்நுயாத்

(ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிச் செய்தது)

Related posts