சனி பகவான் காயத்ரி மந்திரம் மற்றும் ஸ்லோகம்

சனி பகவான் காயத்ரி மந்திரம் மற்றும் ஸ்லோகம்

கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன்.

சனி காயத்ரி மந்திரம் :

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்!
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்!
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ சனைச்சர ப்ரசோதயாத்!
ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்!
ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்!

சனி பகவான் ஸ்லோகம் :

நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்!

கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன் என்று பொருள்.

சனி பரிகார ஸ்தோத்திரம்:

பின்வரும் சனி ஸ்தோத்திரத்தை சனிக்கிழமைகளில் சனி பகவானை வணங்கும் போது உச்சரிக்க, சனி பகவானின் அருள் கிடைக்கும்.

“சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!”

Related posts