விநாயகரை இப்படி வழிபாடு செய்தால், நீங்கள் நினைத்தது 7 நாட்களில் நடக்கும்

Vinayagar

நினைத்ததை நினைத்த மார்க்கத்தில் நடத்தி தரக்கூடிய சக்தி விநாயகர் வழிபாட்டிற்கு உண்டு. ஏதாவது ஒரு விஷயத்தை நாம் புதியதாக தொடங்குகின்றோம் என்றால், அந்த காரியம் நல்லபடியாக முடிவதற்கு விநாயகரின் ஆசிர்வாதம் கட்டாயம் தேவை. பெரும்பாலும் இது நம் எல்லோருக்கும் தெரியும். வீட்டில் வேறு ஏதாவது தெய்வங்களுக்கு சிறப்பான பூஜைகள், ஹோமங்கள் செய்வதாக இருந்தாலும் முதலில் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வணங்குவது தான் நம்முடைய வழக்கம். விக்னங்களை நீக்கும் விநாயகர் வழிபாட்டில் பிரத்தியேகமான ஒரு வழிபாட்டைப் பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த வழிபாட்டு முறைக்கு நமக்கு கட்டாயம் தேவையான பொருள் எருக்கம் பூ. ஏழு நாட்களும் விநாயகருக்கு இந்த பூஜையை செய்யும் போது நமக்கு கட்டாயமாக எருக்கம்பூ தேவை. உங்களுடைய வீட்டின் அருகில் எருக்கஞ்செடி இருந்தால் அந்த செடியில் இருந்து தினமும் 5 எருக்கன் பூக்களை முந்தைய நாளே பரித்துக் கொண்டு வந்து, உங்களுடைய வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, எடுத்து வந்த எருக்கன் பூவை விநாயகர் படத்திற்கு முன்பு வைத்து விட வேண்டும். விநாயகருக்கு ஒரு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். தீபத்தின் முன்பு அமர்ந்து உங்களுடைய கோரிக்கைகளை விநாயகரிடம் சொல்லி, பின் வரும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். எத்தனை வருடங்களாக உங்களுக்கு தடைபட்டு வரும் காரியமாக இருந்தாலும், நிச்சயமாக அந்த காரியத்தில் இருக்கும் தடை நீங்கி அந்த காரியத்தில் வெற்றி பெற நீங்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரம் இதோ.

வயநமசி வவ்வும் கணபதி வகார கணபதி

யநமசிவ யவ்வும் கணபதி யகார கணபதி

நமசிவய நவ்வும் கணபதி

நகார கணபதி மசிவயந மவ்வும் கணபதி

மகார கணபதி சிவயநம சிவ்வும் கணபதி சிகார கணபதி

அரிஓம் ஐயும் கிலியும் சவ்வும் தேவரீர் கைவசமானது போல

சங்கு சக்கரம் சர்வ சத்துரு வசீகரம் உலகெல்லாம்

உனது வசம் ஆனது போல எனது வசமாக சிவா

உங்களுடைய நிறைவேறாத வேண்டுதல் நிறைவேற, ஏழு நாட்கள் விநாயகரை இப்படி வழிபாடு செய்தாலே போதும். உங்களுடைய கோரிக்கைகள் நியாயமான கோரிக்கைகள் ஆக இருந்தால், அந்த வேண்டுதல் ஏழு நாட்களில் விநாயகரின் ஆசீர்வாதத்தால் நிச்சயமாக நிறைவேறும். 7 நாட்களும் ஒரே கோரிக்கையை வைக்க வேண்டும்.

ஏழு நாட்களுக்கு பின்பும் உங்களுடைய வேண்டுதல் நிறைவேறாமல் இருந்தால் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் நிச்சயம் வரும். தாராளமாக தினந்தோறும் விநாயகருக்கு இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால் காரிய தடை விலகும். நாம் எண்ணிய காரியங்கள் அனைத்தும் எந்த தடையும் இல்லாமல் நிறைவேறும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

Related posts