வெள்ளிக்கிழமைகளில் இந்த பாடலை பாடினால் செல்வத்தை அள்ளித்தருவாள் மகாலட்சுமி

தமிழில் கொடுக்கப்பட்டுள்ள இப்பாடலை வெள்ளிக்கிழமை தோறும் பாடினால் உங்களுக்கு மகாலட்சுமி தேவியே வந்து செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நம்பிக்கை.

மகாலட்சுமிதினமும் விளக்கு ஏற்றுபவர் இல்லத்தில் எப்பொழுதும் வறுமை என்பதே இருப்பதில்லை. இந்த பாடலில் வரும் பொருளை கேட்டால் உங்களுக்கு நன்றாகவே புரியும். தமிழில் கொடுக்கப்பட்டுள்ள இப்பாடலை வெள்ளிக்கிழமை தோறும் பாடினால் உங்களுக்கு மகாலட்சுமி தேவியே வந்து செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நம்பிக்கை. அப்பாடலைப் பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

திருவே என் இல்லம் வருவாயே!
திருமாலின் தேவி!
பங்கஜலோசனி பரம தயாபாரி!
கமல மனோஹரி கருணாகரி நீ…
எங்கும் திகழும் இனிய பொற்பாதம்
எங்கள் இல்லத்தில் பதிந்திட வேண்டும்
பிள்ளைகள் எத்தனை தவறுகள் செய்தாலும்
தள்ளியே வெறுப்பது தாயுனக்கழகோ!
உள்ளம் உவந்து ஒருபிடி செல்வம்
அள்ளித் தருவாய் வெள்ளிக்கிழமையில்
அம்மா உன்னை வேண்டியே நின்றோம்
அருளொடு பொருளும் தருவாய் நீயே!
எங்கள் இல்லம் வருவாய் அம்மா
என்றும் இன்பம் தருவாய் அம்மா…

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை வேளையில் வீட்டில் விளக்கேற்றும் பொழுது, மகாலட்சுமியை நினைத்து செல்வம் வர வேண்டி, பணம் பெருக மனமார நம்பிக்கையோடு துதிக்க வேண்டும். இத்தனை முறை தான் பாட வேண்டும் என்கிற எந்த விதிமுறையும் இல்லை. உங்களுக்கு எவ்வளவு முறை பாட வேண்டும் என்று தோன்றினாலும் தாராளமாக பாடலாம். அவளின் பொற் பாதங்களை வணங்கி சுகபோக வாழ்வு வாழ்வதற்கு தாயிடமே கேட்கும் பிள்ளையின் வேண்டுதலாக அமைந்துள்ளது.

Related posts