குழந்தை பாக்கியம் அருளும் குரு பகவானுக்குரிய மந்திரம்

குழந்தை பாக்கியம் அருளும் குரு பகவானுக்குரிய மந்திரம்

குரு மந்திரத்தை வியாழக் கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, தானியங்களை கொண்டு வழிபாடு செய்தால் மிக நல்ல பலன்களை தரும்.

குரு பகவான் நிறைவான செல்வங்கள், செய்தொழிலில் முன்னேற்றத்தைத் தருபவர் மட்டுமல்லாமல், குழந்தை பாக்கியம் எனும் மகத்தான பலனை தரக் கூடியவர். புத்திர பாக்கியத்தை பெற சொல்ல வேண்டிய குரு மந்திரத்தை இங்கு பார்ப்போம்…

குழந்தை பாக்கியம் பெற குரு பகவானுக்குரிய மந்திரத்தை வியாழக்கிழமை தோறும் சொல்லி வர கிடைக்கும் என நம்பப்படுகிறது. குரு பகவான் என்பவர் ஆசிரியராக மட்டுமல்லாமல் நம் உடலுக்கு ஏற்படும் பிரச்னை, நோய்களுக்கு மருந்தாக இருந்து அருள்புரிகிறார்.

குரு பகவான் புத்திர பாக்கியத்தை தருவதோடு, காது, கல்லீரல், இடுப்பு உள்ளிட்ட நோய்களுக்கு அவர் மருந்தாக குருவின் மந்திரம் இருக்கிறது. குரு மந்திரத்தை வியாழக் கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, தானியங்களை கொண்டு வழிபாடு செய்தால் மிக நல்ல பலன்களை தரும்.

குரு பகவான் காயத்ரி மந்திரம்:
வருஷபத் வஜாய வித்மஹே
க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு ப்ரசோதயாத்

மன பயம் போக்கி தைரியம் அருளும் ஸ்லோகம்

Related posts