சனி தோஷம் நீக்கும் ஸ்லோகம்

நீதியை எடுத்துரைக்கும் சனி பகவாஅன், நம்முடைய கர்ம வினைக்கேற்ற பலனை எப்போதும், எந்த நேரத்திலும் தர தயங்குவதில்லை. அதனால் சனியின் அமைப்பால் ஏற்படும் தோஷத்தால் பல துன்பங்கள் அனுபவிக்க வேண்டியுள்ளது. சனி தோஷம் நீங்கள் எளிய ஸ்லோகம் இதோ.

ஏழரைச்சனி மற்றும் சனீஸ்வர கிரகம் சார்ந்த பிற தோஷங்களால் கஷ்டப்படுபவர்கள் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சனிக்கிழமை அன்று சனி ஹோரையில் ஜெபிக்கத் துவங்கி, தினமும் குறைந்தது 3 தடவை ஜெபித்து வர சனீஸ்வரர் அருள் கிட்டும்.

சனீஸ்வர ஸ்லோகம்:-

கோணஸ்த பிங்களோ பப்ரு கிருஷ்ணோ ரௌத்ராந்தகோ யமஹ: |
சௌரி சனைச்சரோ மந்த பிப்பலாதேன சம்ஸ்துதஹ: |
நமஸ்தே கோண ஸம்ஸ்தாய பிங்களாய நமோஸ்துதே

Related posts