பழநியில் மே 27-ல் வைகாசி விசாக விழா கொடியேற்றம் | Vaikasi Visakha Festival flag hoisting at Palani on 27th May

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு மே 27-ம் தேதி காலை 11.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற உள்ளது. விழாவின் 10 நாட்களும் காலை, மாலை வேளையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வருவார்.

ஆறாம் நாளான ஜூன் 1-ம் தேதி இரவு 7.15 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், ஜூன் 2-ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் தேரேற்றமும், அன்று மாலை 4.30 மணிக்கு மேல் தேரோட்டமும் நடைபெற உள்ளது. ஜூன் 5-ம் தேதி இரவில் கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் தினமும் கலை நிகழ்ச்சிகள், பக்தி சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன.
Source link

Related posts

Leave a Comment