திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் திருக்கோவில்

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் திருக்கோவில்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ளது அர்த்த நாரீசுவரர் திருக்கோவில். இது திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல்பெற்ற கொங்கு பகுதியில் அமைந்துள்ள ஆலயமாகும்.

கோவில் விபரம் :
மூலவர் – அர்த்தநாரீசுவரர்
தாயார் – பாகம்பிரியாள்
விருட்சம் – வன்னி, இலுப்பை
தீர்த்தம் – தேவதீர்த்தம்

இந்த ஆலயம் ஒரு மலை மீது அமைந்திருக்கிறது. அந்த மலை ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆண் போன்று தோற்றமளிக்கிறது. மறுபுறம் பெண் போல தோற்றம் தருகிறது.

கோவில் வரலாறு

கோவில் அமைந்திருக்கும் மலை சிவந்த நிறமாக இருப்பதால் செங்கோடு என்று பெயர் பெற்றது. இந்த மலைக்கு நாகமலை, உரசகிரி, தெய்வத்திருமலை போன்ற மற்ற பெயர்களும் உள்ளன.

இந்த மலையேற உள்ள படிகளில் 60வது படி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இங்கு நின்று சத்தியம் செய்தால் அது நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும் நிலை இருந்ததாம்.

முதலிரவுக்கு முன் செல்ல வேண்டிய கோவில் :

இந்த ஆலயத்தில் சிவன் தனது உடலின் சரிபாதியை உமையவளுக்கு தந்து, அர்த்தநாரீஸ்வரராக பக்தர்களுக்கு அருளக்கூடிய தலம் தான் திருச்செங்கோடு.
அர்த்தநாரீஸ்வரர் மூலவராக அமைந்த கோவிலை வேறெங்கும் காண முடியாது. இந்தன் மூலம் இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய கணவன் – மனைவி இருவரும் சரிநிகர் சமானமானவர்கள் என்பதை இந்த சிவ பார்வையின் சேர்க்கை உணர்த்துகிறது.

ஒருவரின் திருமண வாழ்க்கை எனும் இல்லற வாழ்வின் அடிப்படையே முதலிரவிலிருந்து தான் ஆரம்பிக்கிறது. அதனால் தான் திருமணமான தம்பதிகள் தங்களின் முதலிரவைத் தொடங்குவதற்கு முன்னர் இல்லற வாழ்வின் சமத்துவத்தை புரிந்து கொள்ளும் பொருட்டு மதொரு பாகனைத் தம்பதியர் வழிபட்டு இறையருள் பெறுவதால், இல்லறத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான சமத்துவத்தைப் பேண வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.

இப்பகுதியில் உள்ள மக்கள் திருமணமானவுடன், முதலிரவுக்கு முன்பு மணமக்களை அழைத்துச் சென்று மாதொரு பாகனை தரிசித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

Related posts